தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்களது காதல் கதை அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து சினிமாவில் செய்து வரும் சாதனைகள் தெரியுமா.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்துரவுடி பிக்ச்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தி தற்போது ஒரு சில படங்களை தயாரித்து வருகின்றனர்.
முதலில் லாபத்திற்காக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது விருது வாங்கக்கூடிய ஒரு சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து தயாரித்து வருகின்றனர்.
பி.எஸ் வினோத் ராஜ் இயக்கி யுவன் சங்கர் ராஜா இசையமைத்த கூழாங்கல் திரைப்படத்தை தயாரிக்கும் உரிமையை கைப்பற்றினர். கூலாங்கல் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தேர்வு ஆகியது.
சில தினங்களுக்கு முன் விருது விழாவில் கூழாங்கல் திரைப்படம் திரையிடப்பட்டது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்று உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் டைகர் விருது வாங்கும் முதல் திரைப்படம் என பெருமையாகவும் கூறியுள்ளார்.