செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஒருவேளை விடாமுயற்சி அவர் விட்ட சாபமா இருக்குமோ!. அடுத்த கூட்டணியுடன் சூட்டிங்க்கு தயாரான விக்கி

Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருடைய இரண்டு மகன்கள் ஆன உயிர் மற்றும் உலகத்துடன் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுதான் என உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டிருந்த, விக்கி மற்றொரு சூப்பரான குட் நியூஸ் சொல்லி இருக்கிறார். இதுதான் இப்போது பயங்கர ட்ரெண்டில் இருக்கிறது.

நடிகர் அஜித்குமாரின் 62 ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் முதலில் இயக்க இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதன் பின்னால் ஒரு சில கருத்து வேறுபாட்டால் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு எந்த படங்களை பற்றிய அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது. அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் பகிரும் ஒரு சில விஷயங்களும் அவர் ரொம்பவும் டிப்ரஷனில் இருக்கிறார் என்பதை காட்டியது.

Also Read:அஜித்தை விட 6 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கிய விஜய்.. அதைக் கூட கொடுக்காமல் ஏமாற்றிய தயாரிப்பாளர்

அவருடைய வளர்ச்சியை பிடிக்காத நிறைய பேர் இனி விக்னேஷ் சிவன் அவ்வளவுதான், படம் பண்ண மாட்டார் என்று வதந்திகளை கிளப்பி வந்தார்கள். அந்த சமயத்தில் தான் உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

நேற்று விக்னேஷ் சிவனின் பிறந்தநாளின் போது பிரதீப் மற்றும் விக்கி இருவரும் பேசிக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் பிரதீப், விக்னேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ மூலம் இவர்கள் இருவரும் அடுத்து இணைய இருப்பது உறுதியாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் படத்தைப் பற்றிய அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Also Read:LCU இல்லாத புதிய கூட்டணி.. அஜித்திற்கு வலை வீசும் சூப்பர் ஸ்டார்

இந்த கூட்டணியில் படம் உருவானால் கண்டிப்பாக ஃபீல் குட் மூவி ஆகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு இருவருமே நகைச்சுவை காட்சிகளில் கவனம் செலுத்தக் கூடியவர்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் இவர்கள் இருவருக்குமே சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார்கள். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூடுதல் தகவலும் வெளியாகியிருக்கிறது.

மேலும் விக்னேஷ் சிவன் உடன் அஜித் கூட்டணி வைத்திருந்தால் கூட அப்போவே படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்பட்டிருக்கும், ஏன் படமே ரிலீஸ் ஆகும் நிலைக்கு கூட வந்திருக்கும் என அஜித்தின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒருவேளை விக்னேஷ் சிவன் விட்ட சாபமோ என்னவோ இன்னும் அஜித் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்காமலேயே இருக்கிறது எனவும் சொல்லி வருகிறார்கள்.

Also Read:இழுபறியில் லைக்காவின் விடாமுயற்சி.. பெரும் தலைவலியால் சூப்பர் ஸ்டாரிடம் தஞ்சம்

Trending News