திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மரண பயத்தை காட்டிய விக்னேஷ் சிவன்.. வாலை சுருட்டி கொண்டு பம்மும் வெங்கட் பிரபு

Venkat Prabhu: இப்போது சோஷியல் மீடியாவில் வெங்கட் பிரபு பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான கஸ்டடி மொக்கை வாங்கி இருந்தாலும் தற்போது அவர் விஜய் பட இயக்குனராக மாறி இருக்கிறார். இது எதிர்பாராத விஷயமாக இருந்தாலும் படம் பற்றிய எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் இருக்கத் தான் செய்கிறது.

அந்த வகையில் வித்தியாசமான முறையில் பட அறிவிப்பை வெளியிட்டு இருந்த பட குழு அடுத்ததாக ஸ்டோரி டிஸ்கஷசனில் இறங்கி இருக்கின்றனர். இதற்காக வெங்கட் பிரபு தன் குழுவினரோடு ஒரு வீட்டில் முகாமிட்டுள்ளாராம். மொத்த கதையையும் தயார் செய்து சூட்டிங் ஆரம்பிக்கும் வரை இவர்கள் வேறு யாருடனும் தொடர்பு கொள்ள கூடாது என்ற முடிவிலும் இருக்கின்றனர்.

Also read: தளபதியை பற்றி யாருக்கும் தெரியாத 6 விஷயம்.. அஜித், விஜய்க்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா.?

ஏனென்றால் படம் பற்றிய எந்த விவரமும் மீடியாவுக்கு தெரியக்கூடாது என்கிற முன்னேற்பாடு தான். அந்த வகையில் பார்ட்டி பிரதர்ஸ் என்று சொல்லப்படும் வெங்கட் பிரபுவின் குழு தங்கள் 6 மணி அவதாரத்தை கூட ஓரங்கட்டி விட்டு நல்ல பிள்ளையாக ஸ்டோரியை டெவலப் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே ஒன் லைன் ஸ்டோரியை சொல்லி இருந்தாலும் கதையை டெவலப் செய்து விஜய்யை இம்ப்ரஸ் செய்யத்தான் அவர்கள் இவ்வளவு மெனக்கெட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படி இல்லாத பட்சத்தில் வேறு ஒருவரிடம் கதையை வாங்கி அதை இயக்கலாம் என்ற ஒரு யோசனையிலும் வெங்கட் பிரபு இருக்கிறாராம்.

Also read: விஜய்யால் சோலி முடிந்த 6 இயக்குனர்களின் கேரியர்.. மரண அடி வாங்கிய சிம்பு தேவன்

இதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை இயக்குவதற்கு முதலில் கமிட் ஆனவர் விக்னேஷ் சிவன் தான். ஆனால் கதையில் செய்த குளறுபடி காரணமாக அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அந்த பயம்தான் இப்போது வெங்கட் பிரபுவுக்கும் இருக்கிறது.

விஜய் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பை தன்னுடைய விளையாட்டு தனத்தால் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அவர் தற்போது தன் வாலை எல்லாம் சுருட்டிக்கொண்டு பயபக்தியோடு வேலையை பார்த்து வருகிறாராம். அந்த வகையில் விக்னேஷ் சிவன் வெங்கட் பிரபுவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இயக்குனர்களுக்கும் ஒரு மரண பயத்தை காட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: மொத்த ஆர்டிஸ்டையும் செலக்ட் பண்ணிய தளபதி 68.. அரசல் புரசலா வந்ததுக்கே வெங்கட் பிரபுவை வெளுத்து விட்ட விஜய்

Trending News