திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மூன்று பேரிடம் போன ஏகே 62 வின் கதை.. அஜித்தை பழிவாங்க 2 பேருக்கு வலை விரிக்கும் விக்னேஷ் சிவன்

பொதுவாக விக்னேஷ் சிவன் சீரியஸான கதையை எடுக்காமல் ஒரு ஜாலியான என்டர்டைன்மென்ட் படங்களாக எடுத்து வெற்றி கண்டு வருகிறார். இந்த சூழலில் டாப் நடிகரான அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்ததால் எப்படி கதை யோசித்து இருப்பார் என ரசிகர்களுக்கு கேள்வி எழுந்தது.

ஆனால் கடைசியில் அஜித்துக்கும், லைக்கா நிறுவனத்திற்கும் இந்த கதை பிடிக்காமல் போனதால் விக்னேஷ் சிவனை தூக்கி விட்டு மகிழ்திருமேனியை ஏகே 62 படத்திற்கு புக் செய்துள்ளார்கள். மேலும் இந்த படத்தின் அறிவிப்பு மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியாகி மூன்றாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Also Read : வீட்டுக்குள்ளே முடங்கிப் போன விக்னேஷ் சிவன்.. தேடி சென்று துக்கம் விசாரிக்கும் பிரபலங்கள்

விக்னேஷ் சிவன் அஜித்துக்கு ஏகே 62 கதையை சொல்வதற்கு முன்பே இரண்டு ஹீரோக்களிடம் இந்த கதை குறித்து ஆலோசனை செய்துள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இடம் இந்த கதை சொல்லி உள்ளார். அப்போது இவர்கள் இருவருமே பிசியாக இருந்ததால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டனர்.

அப்போதுதான் அஜித், விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார். மேலும் இந்த கதை தனக்கு பிடிக்கவில்லை என்றும் வேறு கதை எடுத்து வாருங்கள் என்று விக்னேஷ் சிவனிடம் அஜித் கூறியுள்ளார். அவர் அதே கதையை உருட்டியதால் அஜித் விக்னேஷ் சிவனை நிராகரித்து விட்டார்.

Also Read : சின்ன விஷயத்திற்காக ரொமான்ஸ் சீனை தூக்க சொன்ன அஜித்.. எஸ்ஜே சூர்யா சொன்ன ரகசியம்

அஜித்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் அல்லது விஜய் சேதுபதி ஆகியோரில் ஒருவரை வைத்து விக்னேஷ் சிவன் அதே கதையை எடுக்க உள்ளாராம். மேலும் அஜித் இந்த படத்தை தவற விட்டு விட்டோமே என்று நினைக்கும் அளவுக்கு தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறாராம்.

சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் அந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கிய இரண்டு படங்களில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆகையால் மூன்றாவது முறையாக ஏகே 62 கதையில் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி கூட்டணி இணைய உள்ளது.

Also Read : 5 வருஷமா ஒரு ஹிட் படம் கொடுக்க முடியல.. இதுல விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொன்ன டஃப் நடிகர்

Trending News