வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நாலா பக்கமும் ஏழரை சனியால் முழிக்கும் விக்னேஷ் சிவன்.. டைட்டிலுக்கு போடும் சண்டை

Vignesh shivan starts his new film with pradeep: கோமாளி இயக்கிய பிரதிப் ரங்கநாதனின் நடிப்பில் வெளியான லவ் டுடே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததை அடுத்து பிரதீப் தனது  சம்பளத்தை கடகடவென உயர்த்தி விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்க தயாரானார்.

விக்னேஷ் சிவனோ காத்து வாக்குல ரெண்டு காதலுக்கு அப்புறம் ஒரு நீண்ட இடைவெளி எடுத்து குடும்பம் குட்டி என பிசியாகி விட்டு தனது அடுத்த கதைக்காக பல நடிகர்களை அணுகிய நிலையில் பிரதிப் ரங்கநாதன் கிளிக்கானார். முதலில் இப்படத்தை கமல் தயாரிக்க போவதாக இருந்தது. நாயகனின் சம்பளத்தை கேட்டு அதிர்ந்த உலக நாயகன் இப்போதைக்கு வேண்டாம் என மெதுவாக டேக்கா கொடுத்தார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் கூட்டணியில்  எல்ஐசி(லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) படத்துக்கு பூஜை போட்டார். இப்படத்தில் பிரதீப், கீர்த்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, யோகி பாபு என பலரும் நடிக்க உள்ளனர். எஸ் ஜே சூர்யா கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக நடிக்க உள்ளார்.

Also read: அழகில் மயங்கி நடிகைகளை கல்யாணம் செய்த 5 இயக்குனர்கள்.. கில்லாடி வேலை பார்த்த விக்னேஷ் சிவன்

படத்தின் பூஜைக்கு பின் படத்திற்கான டைட்டில் என்னுடையது என்று உரிமை குரல் எழுப்பி உள்ளார் இயக்குனர் எஸ் எஸ் குமரன். இயக்குனர் சசியின் பூ படத்துக்கு  இசையமைப்பாளராக அறிமுகமான எஸ் எஸ் குமரன் பின்னாளில் தேநீர் விடுதி, கேரளம் நாட்டிலம் பெண்களுடனே போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் புதிதாக இயக்கவிருக்கும் படத்திற்கு எல்ஐசி என்ற பெயரை 2015 ஆம் ஆண்டு பதிவு செய்து இருந்தார்.

விக்னேஷ் சிவனின் மேனேஜர் இவரை அணுகி படத்தின் தலைப்பு தொடர்பான விவகாரத்தை பேசிய நிலையில் இவர் தலைப்பை விட்டுக் கொடுத்த மாதிரி தெரியவில்லை. தலைப்பை மாற்றிக் கொள்கிறோம் என்று விக்னேஷ் சிவன் தரப்பு கூறியுள்ளதாக தெரிவித்தார். சமீபத்தில் நடந்த  எல்ஐசி பட பூஜை விழாவை  வலைதளத்தில் கண்ட இயக்குனர் எஸ் எஸ் குமரன் அதிர்ச்சி அடைந்து விக்னேஷ் சிவனின் மீது கடுப்பாகி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து விட்டார்.

மேலும் இப்படத்தின் தலைப்பு எல்ஐசி ஐ மாற்றாவிடில் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சபதம் ஏற்று உள்ளார். படத்தின் முழு தலைப்பான  லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் வேணும்னாலும் வச்சுக்கோங்க ஆனால் lic யை கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வருகிறார் இயக்குனர் குமரன்.

விக்னேஷ் சிவனின் படத்திற்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்துள்ளது. கண்டிப்பாக எல்ஐசி எதிர்பார்த்ததை விட அமோகமாக வசூல் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எல்ஐசி தான் படத்தின் தலைப்பா அல்லது வேறு தலைப்பு மாற்றுவார்களா என்பது கேள்விக்குறியே.

Also read: அஜித்துடன் படம் பண்ண போட்டி போடும் 5 இயக்குனர்கள்.. மீண்டும் விக்னேஷ் சிவன் போட்ட அப்ளிகேஷன்

Trending News