ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

என்ன விட ராங்கியா இருப்பா போல.. விக்னேஷ் சிவனிடமே நயன்தாராவை பற்றி ஒத்து ஊதிய நடிகை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை திருமணம் செய்து விட்டேன் என விக்னேஷ் சிவனுக்கு இப்போதெல்லாம் கொஞ்சம் தெனாவெட்டு கூடிவிட்டது. அதிலும் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரபல நடிகையுடன் நயன்தாராவை ராங்கி என்று விமர்சித்து இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான். இந்த படத்திற்கு பிறகு தான் இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு, அதன் பின் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா செய்த செயலை பார்த்து ராதிகா மிரண்டு போயிருக்கிறாராம்.

Also Read: தரமான ரீ-என்ட்ரி, சித்தார்த்திற்கு அடுத்தடுத்து ரெடியாகும் 3 படங்கள்.. நயன்தாராவுடன் மல்லுக்கட்டும் டெஸ்ட்

ஏற்கனவே சினிமாவில் சவுண்டு பார்ட்டியாக இருக்கக்கூடிய ராதிகா, நானும் ரவுடிதான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவை பார்த்த பிறகு இவர் என்னை விட ராங்கியா இருப்பாரு போல என்று நினைத்திருக்கிறார். ஏனென்றால் நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக ராதிகா நடித்திருப்பார். ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா சைலன்ஸ் என்று ரொம்பவே சத்தமாக கத்தி விட்டாராம்.

அவர் சவுண்டை கேட்டு ஒட்டுமொத்த செட்டுமே கப் சிப்-ன்னு அமைதியாகிவிட்டது. இதை கவனித்த ராதிகா நடிகை சுபாஷினியை சந்தித்து பேசிக் கொண்டிருக்கும்போது நானும் ரவுடிதான் படத்தின் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த சமயத்தில் நானே ஷூட்டிங் ஸ்பாட்டில் டெரராகத்தான் இருப்பேன்.

Also Read: நயன்தாராவுடன் மல்லுக்கட்டும் மாமி.. நம்பர் ஒன் இடத்துக்காக திருமணத்தை வெறுத்த வைராக்கியம்

ஆனா இந்தப் பொண்ணு நயன்தாரா என்னைவிட ராங்கியா இருப்பார் போல. சைலன்ஸ் என்று சொல்வதையே அவ்ளோ சத்தமா சொல்கிறார் என தெரிவித்திருக்கிறார். இதனை சுகாசினியும் சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவனிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டார். அப்போது பேசிய விக்னேஷ் சிவன், ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா கொஞ்சம் டெரர் தான்’ என அவருடன் சேர்ந்து ஒத்து ஊதினார்.

என்னதான் நடிகையாக இருந்தாலும் தன்னுடைய மனைவியை பற்றி பகிரங்கமாக பொது இடத்தில் நெகட்டிவ் கமெண்ட் கொடுப்பது சரியல்ல. இருப்பினும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் தான் நயன் என்கின்ற அர்த்தத்தில் விக்னேஷ் சிவன் தன்னுடைய மனைவி ஒரு ராங்கி தான் என்பதை ஒத்துக் கொண்டார்.

Also Read: நடிகைகளை திருமணம் செய்து கேரியரை தொலைத்த 5 இயக்குனர்கள்.. விக்னேஷ் சிவனை கதறவிடும் சினிமா

Trending News