ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மனைவியுடன் ஊர் சுற்றியவரை உருக்கமாக பாராட்டிய விக்னேஷ் சிவன்.. வியந்து பார்க்கும் திரையுலகம்

கடந்த 2012 ஆம் ஆண்டு போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் விக்னேஷ் சிவனுக்கு அடுத்ததாக நயன்தாராவின் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அதற்கு முன்பு நயன்தாராவை சிம்பு உருகி உருகி காதலித்து வந்தார். அதன் பின்னர் சிம்பு- நயன் இருவருக்கும் இடையே பிரேக் அப் ஆனது. அதன் பிறகு தான் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவிற்கும் விக்கிக்கும் காதல் மலர்ந்தது. விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். 

Also Read: 2024-யை குறி வைத்திருக்கும் தளபதி.. லேடி சூப்பர் ஸ்டார் உடன் விஜய் போட்ட பிளான்

இந்த படம் வெளியான பின்னரே இருவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது இவர்கள் வாடகைத்தாய் முறை மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆகி உள்ளனர். இந்த நிலையில் நயன்தாராவுடன் ஊர் சுற்றிய முன்னாள் காதலன் சிம்புவை விக்னேஷ் சிவன் வியந்து பேசி இருப்பது தற்போது திரையுலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. ஏனென்றால் விக்னேஷ் சிவன்  போடா போடி படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அதில் இடம்பெற்ற 3 பாடல்களையும் எழுதி இருப்பார்.

அதை தொடர்ந்து வணக்கம் சென்னை, என்னை அறிந்தால், மாஸ்டர், வலிமை போன்ற பல படங்களில் அவர் பாடல்களை எழுதியுள்ளார். விக்னேஷ் சிவனுக்கு இயக்குனராக படங்கள் ஹிட் கொடுக்கா விட்டாலும் பாடல்களின் மூலம்  ரசிகர்களின் மனதை தொட்டார். ஆனால் இதற்கெல்லாம் காரணம் சிம்பு தான் என்ற உண்மையை தற்போது விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Also Read: 9 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி.. சர்ப்ரைஸாக வெளிவந்த நயன்தாராவின் 75வது பட அறிவிப்பு

ஏனென்றால் விக்னேஷ் சிவன் சிம்புவும் ஒரே பள்ளியில் படித்த நெருக்கமான நண்பர்கள். அப்படிப்பட்ட நட்பின் காரணமாகத்தான்  விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான போடா போடி படத்தில் சிம்பு கமிட்டானார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவன் சொல்லும் வசனங்களை கேட்டு சிம்பு சிரித்துக்கொண்டே அவரை உற்சாகப்படுத்தினாராம். அதன் பிறகு படத்திற்கு பாடல்களை நீயே எழுது என்றும் ஊக்கப்படுத்தினாராம்.

அப்படி உருவான ஆர்வம் தான் அடுத்தடுத்து விக்னேஷ் சிவனை பாடலாசிரியராக பல படங்களில் பயணிக்க வைத்தது. இதற்கெல்லாம் முழு காரணமும், அதற்கான பாராட்டும் சிம்புவால் தான் கிடைத்தது என்று விக்னேஷ் சிவன் மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஆனால் ஒரு காலத்தில் தனது மனைவி நயன்தாராவை காதலித்த சிம்புவை விக்னேஷ் சிவன் வெளிப்படையாக பாராட்டி இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Also Read: குலதெய்வத்திடம் அடைக்கலமான மூக்குத்தி அம்மன்.. பிரச்சனை மேல் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் நயன்-விக்கி

ஆனால் விக்னேஷ் சிவன் இயக்குனராக சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு சிம்பு தான் முக்கிய காரணமாக இருந்தார் என்பது நிதர்சனமான உண்மை. ஏனென்றால் அவரின் முதல் படத்திற்கான கதையைக் கேட்டதும் நடிகர்கள் பலரும் ரிஜெக்ட் செய்த நிலையில், சிம்பு தான் முன்வந்து போடா போடி படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தான் இப்போது விக்னேஷ் சிவன் சிம்புவுக்கு மனதார நன்றி கூறி உள்ளார்.

Trending News