செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

Vignesh Shivan : பெரிய ஆட்களை எல்லாம் பகைத்து கொள்ளும் விக்னேஷ் சிவன்.. டாட்டா போட்டு ஷங்கர் படத்துக்கு கிளம்பிய மாஸ்டர் 

விக்னேஷ் சிவன் தொடர்ந்து பெரிய ஆட்களை பகைத்துக் கொள்வதால் அவரது கேரியரில் அடுத்தடுத்த மிகுந்த அடி விழுந்து வருகிறது. போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அதன் பிறகு சில படங்களை இயக்கினார். 

இந்நிலையில் மிகக் குறுகிய காலத்திலேயே அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்காவிடமிருந்து இந்த வாய்ப்பு வந்தது. ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார் விக்னேஷ் சிவன். 

கதையில் சொதப்பல் இருந்ததால் அஜித் விக்னேஷ் சிவனே நிராகரித்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு இதே லைக்கா தயாரிப்பில் அஜித்தின் விடாமுயற்சி படத்தை இப்போது மகிழ்திருமேனி இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தை தொடங்கி இருந்தார்.

எல்ஐசி படத்தில் ஏற்பட்ட சிக்கல்

லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் எல்ஐசி படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கேமராமேன் ஆக வேலை பார்த்து வருபவர் ரவிவர்மன். 

இவருடன் தான் விக்னேஷ் சிவனுக்கு இப்போது பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இந்த சண்டை முற்றிய நிலையில் எல்ஐசி படத்திற்கு டாட்டா காட்டிவிட்டு ஷங்கரின் இந்தியன் 2 படத்துக்கு கிளம்பி விட்டாராம் ரவிவர்மன்.

இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விக்னேஷ் சிவன் முழித்து வருகிறாராம். ஏற்கனவே நயன்தாராவால் தான் இவரது பிழைப்பு போய்க் கொண்டிருக்கிறது என கோடம்பாக்கத்தில் பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. இப்போது இந்த படமும் கைநழுவி போனால் அவ்வளவு தான்.

Trending News