ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிவகார்த்திகேயனை மிஸ் செய்த விக்னேஷ் சிவன்.. அஜித்தை போல் கைநழுவிப் போன எஸ்கே

Vignesh Shivan : போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன். இந்த படம் அவருக்கு சரியாக போகவில்லை என்றாலும் அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.

இந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. லைக்கா இப்படத்தை தயாரிக்க முன் வந்தது.

ஆனால் விக்னேஷ் சிவனால் இந்த வாய்ப்பு கைநழுவி போய்விட்டது. அதன் பிறகு விடாமுயற்சி என்ற டைட்டிலுடன் மகிழ்த்திருமேனி அஜித்தை வைத்து படம் இயக்கி வருகிறார். அஜித்தை போல சிவகார்த்திகேயனையும் கைநழுவி விட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

சிவகார்த்திகேயனை தவறவிட்ட விக்னேஷ் சிவன்

அதாவது இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்த காதல் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை நயன்தாரா தயாரிக்கிறார். ஆரம்பத்தில் இந்த கதையை சிவகார்த்திகேயனிடம் தான் விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார்.

இந்த கதை அவருக்கு பிடித்துப் போக படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். லைக்காவும் இந்த படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது. மேலும் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டது. மேலும் இதனால் காலதாமதமும் ஆகியிருக்கிறது.

இதை அடுத்து சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் பிஸியாகிவிட்டார். அதன் பிறகு தான் விக்னேஷ் சிவன் இந்த படத்தை உடனே எடுக்க வேண்டும் என்பதற்காக பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து இப்படத்தை எடுத்து வருகிறார். அவரது மனைவி நயன்தாராவே இப்படத்தை தயாரிக்க சம்மதித்திருந்தார்.

Trending News