வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லண்டன் வரை சென்று அவமானப்பட்ட விக்னேஷ் சிவன்.. லைக்கா அஜித் கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்

தற்போது இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ள விஷயம் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டது தான். ஒரு டாப் நடிகரின் படத்திலிருந்து இயக்குனர் தூக்கப்பட்டால் அவரது கேரியர் எவ்வளவு மோசமாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதுவும் அஜித் தனக்கு ஒரு தோல்வி படம் கொடுத்தாலும் அந்த இயக்குனர் வெற்றி படம் கொடுக்கும் வரை அவருடனே கூட்டணி போடுவார். அதன் பிறகு தான் அந்தக் கூட்டணியில் இருந்து விலகுவார். அப்படிதான் சிறுத்தை சிவா, வினோத் போன்றவர்கள் தோல்வி படம் கொடுத்தாலும் கடைசியாக வெற்றி படம் கொடுத்த பின்பே அஜித் கூட்டணியில் இருந்து விலகி உள்ளார்கள்.

Also Read : தலைவர் சொன்னதால் அஜித் நடிக்க இருக்கும் பாட்ஷா-2.. உறுதிப்படுத்திய ஹெச். வினோத்

ஆனால் இப்போது விக்னேஷ் சிவனின் எதிர்காலத்தை கருதாமல் அஜித்தின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்று பலரும் வினவி வருகிறார்கள். அதாவது விக்னேஷ் சிவன் அஜித்திடம் கதை சொல்லி உள்ளார். அந்தக் கதையை கேட்ட அஜித், இது தனக்கு பிடிக்கவில்லை என்று நேரடியாகவே விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார்.

ஆனால் அதையும் மீறி விக்னேஷ் சிவன் லண்டன் வரை சென்று தயாரிப்பாளரிடம் இதே கதையை கூறியுள்ளார். உடனே லைக்கா தயாரிப்பு நிறுவனம் இந்த கதையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, 8 மாதம் உங்களுக்கு கால் அவகாசம் கொடுத்து கதையை ரெடி பண்ண சொன்னால் இப்படி ஒரு குப்பை கதையை எடுத்து வந்துள்ளீர்களே என்று கூறியுள்ளார்கள்.

Also Read : விக்னேஷ் சிவன் கேரியரை முடித்துவிட்ட அஜித்.. ஆசை காட்டி மோசம் செய்ததால் கடுப்பான நெட்டிசன்கள்

இவ்வாறு அஜித்துக்கு தெரியாமல் லண்டன் வரை சென்று விக்னேஷ் சிவன் அசிங்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி எதார்த்தமாக அந்த சமயத்தில் அஜித்தும் லண்டன் சென்றுள்ளார். அப்போது லைக்கா நிறுவனம் அஜித்தை தனது தயாரிப்பு அலுவலகத்திற்கு அழைத்துள்ளது.

அதன் பின்னர் விக்னேஷ் சிவனை வரவழைத்து அஜித் மற்றும் லைக்கா இருவரும் சேர்ந்து இந்த படத்திற்கு நீங்கள் வேண்டாம் என முகத்துக்கு நேராகவே கூறிவிட்டனராம். இவ்வாறு மிகப்பெரிய ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் கிடைத்தும் விக்னேஷ் சிவன் அலட்சியமாக இந்த வாய்ப்பை இழந்து விட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read : அஜித் பிரம்மாண்டத்தின் உச்சம் தொட வரிசை கட்டி நிற்கும் 3 இயக்குனர்கள்.. எதிர்பார்ப்பை எகிற செய்த ஏகே 63

Trending News