Vignesh Shivan: விக்னேஷ் சிவன் இயக்குனர் என்பதை மறந்துவிட்டு பிசினஸ் செய்ய கிளம்பிவிட்டார். சமீபத்தில் அவர் பிரபலங்களின் கால்ஷீட் கவனித்துக் கொள்ளும் நிறுவனத்தை தொடங்கியதாக செய்திகள் வந்தது.
அதை அடுத்து தற்போது அவர் அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு வாங்க கிளம்பி விட்டார். நேற்று புதுச்சேரி சட்டப்பேரவைக்கு விக்னேஷ் சிவன் சென்றுள்ளார்.
அங்கு சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து கடற்கரை சாலையில் உள்ள சீகல்ஸ் ஹோட்டலை வாங்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இதனால் ஷாக்கான அமைச்சர் அது அரசுக்கு சொந்தமானது. தனியார் வசம் கொடுக்க முடியாத எனக் கூறியிருக்கிறார்.
மேலும் விக்னேஷ்வரன் கடற்கரை சாலையில் உள்ள பகுதிகள் தனியாருக்கு ஒப்பந்தம் போட்டு வழங்கப்படுகின்றன. அதில் ஒரு இடம் கிடைக்குமா என கேட்டுள்ளார்.
அரசு சொத்தை விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன்
ஆனால் முன்பே டெண்டர் கோரப்பட்டு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என அமைச்சர் கூறி இருக்கிறார். இந்த விஷயம் தற்போது வெளியாகி அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இணையவாசிகள் விக்கியை பணம் இருக்கும் திமிரில் ஆடுகிறார் என திட்டி வருகின்றனர். அதனால் அமைச்சர் இது குறித்து விளக்கியுள்ளார்.
விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் இசை நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக பேச தான் வந்தார். சுற்றுலா துறையினரை மகிழ்விக்கும் வகையில் இங்கு பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதை தனியார் நிறுவனங்களும் நடத்தலாம். அப்படித்தான் விக்னேஷ் சிவன் வந்திருந்தார் என தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் பேசு பொருளாக மாறி இருக்கிறது.