திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எல்லாத்துக்குமே பலிக்கிடாவா மாறிய விக்னேஷ் சிவன்.. அடுத்த ஆடு கிடைக்காமல் நொந்து நூடுல்ஸான இயக்குனர்

Vignesh Sivan: சிலருக்கு கல்யாணத்துக்கு அப்புறம் யோகம் வரும். அதுவே சிலருக்கு திரும்பும் பக்கமெல்லாம் பிரச்சனையாக அமையும். அப்படி ஒரு நிலைமையில் தான் விக்னேஷ் சிவன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு நேரமே சரியில்லை என்னும் அளவுக்கு பிரச்சனைகள் ரவுண்டு கட்டி வருகிறது.

அஜித் படத்தை இயக்க இருந்து, திடீரென நீக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை அவர் கடும் மன உளைச்சலில் தான் இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க அவருடைய மனைவிக்கும் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை. தற்போது அவர் நடித்துள்ள ஜவான் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

Also read: விக்னேஷ் சிவனால் பறிபோன நிம்மதி.. நயன்தாராவை சுற்றும் சொத்து பிரச்சனை

அதை அடுத்து கிடைக்கும் படங்களை எல்லாம் ஒப்புக்கொள்ளும் நயன்தாரா எப்படியாவது மாஸ் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். மேலும் இவர்களின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தைக் கூட மூடிவிடலாம் என்ற ஒரு யோசனையிலும் இருக்கிறார்களாம்.

ஏனென்றால் தயாரிப்பதை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தும் முடிவில் தான் நயன்தாரா இருக்கிறார். அதன் காரணமாகவே இப்போது பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். இப்படி இவர் பிஸியாக இருக்கும் சூழலில் விக்னேஷ் சிவனின் நிலைதான் பரிதாபமாக மாறி இருக்கிறது.

Also read: ஜவான் படத்தின் பிரீ பிசினஸ் இத்தனை கோடியா.? ஷாருக்கானின் படங்களில் இதுதான் பிரம்மாண்டம்

அதாவது அஜித் படத்தில் இருந்து இவர் கழட்டிவிடப்பட்டதிலிருந்தே பல இயக்குனர்கள் அரண்டு போய் இருக்கிறார்கள். தற்போது டாப் ஹீரோக்களை இயக்கப் போகும் இயக்குனர்கள் எங்கே கதை சரியில்லை என்றால் நீக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் ஸ்கிரிப்ட் வேலைகளை பயபக்தியோடு செய்து வருகிறார்கள்.

விஜய்யை இயக்கப் போகும் வெங்கட் பிரபு கூட தற்போது தன் சேட்டை எல்லாம் ஓரம் கட்டி விட்டு நல்ல பிள்ளையாக வேலை பார்த்து வருகிறார். இப்படி எல்லாத்துக்கும் பலிக்கிடாப் போல் மாறி இருக்கும் விக்னேஷ் சிவன் தனக்கான ஒரு பலி ஆடு கிடைக்காமல் நொந்து நூடுல்ஸாகி போயிருக்கிறார்.

Also read: திரிஷாவை விட 6 வயசு கம்மி.. ஆனாலும் 100 கோடி வசூல் நாயகனுடன் ஜோடி

Trending News