காத்துவாக்குல இரண்டு காதல் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன், அஜித் கூட்டணியில் ஏகே 62 படம் உருவாக இருப்பதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. இந்த வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா மூலம் தான் கிடைத்ததாக கூறப்பட்டது.
இதனால் விக்னேஷ் சிவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். அதுமட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இயக்கிய படங்களின் வரிசையில் ஏகே 62 என்ற பெயரையும் விக்னேஷ் சிவன் சேர்த்திருந்தார். மேலும் அஜித் சமீபகாலமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
Also Read: விக்னேஷ் சிவனை டீலில் விட்ட அஜித்.. உதயநிதி இயக்குனருடன் கைகோர்க்கும் ஏகே-62 காம்போ
ஆனால் கடந்த சில நாட்களாக ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இயக்குனர் மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அதை உறுதி செய்யும் வகையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஏகே 62 பெயரை நீக்கி உள்ளார்.
அதுமட்டுமின்றி தனது ட்விட்டர் முகப்பில் அஜித்தின் புகைப்படத்தை இதுவரை வைத்திருந்தார். அதையும் நீக்கி விட்டு எதற்கும் மனம் தளர கூடாது, உண்மை உள்ள இடத்தில் உங்களுக்கான வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்ற புகைப்படத்தை வைத்துள்ளார். இந்நிலையில் ஏகே 63 படத்தில் அஜித், விக்னேஷ் சிவன் மீண்டும் இணைவார்கள் என்று ஒரு தகவல் வெளியானது.
Also Read: விக்னேஷ் சிவனால் தள்ளிப்போகும் ரஜினி படம்.. அஜித் வேண்டாம் என சொன்னதன் பின்னணி
ஆனால் தற்போது அஜித்தின் புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் நீக்கி உள்ளதால் மீண்டும் இவர்கள் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று சந்தேகம் எழுந்துள்ளது. அவருடைய ட்விட்டர் முகப்பு புகைப்படம் மூலம் ஏகே 62 படத்தில் இருந்து விலக்கப்பட்டதால் விக்னேஷ் சிவன் வருத்தத்தில் இருப்பதும் தெரிகிறது.

இதை பார்த்த விக்னேஷ் சிவன் ரசிகர்கள் உங்களுக்கு ஒரு நல்ல படம் கிடைக்கும் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள். மேலும் விரைவில் விக்னேஷ் சிவன் வேறு ஒரு ஹீரோவுடன் இணைய உள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
Also Read: அஜித்திற்காக அடித்துக் கொள்ளும் 4 ஹிட் இயக்குனர்கள்.. இந்த ரெண்டு பேரு கன்பார்ம்