விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கயுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
தற்போது அஜித் வலிமை படத்தின் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளார். தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விக்னேஷ் சிவனுடன் அஜித் இணையுள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.
மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே விக்னேஷ் சிவன் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக திருப்தி அளிக்கும் என கூறியிருந்தார். மேலும் இப்படத்தில் என்னுடைய நூறு சதவீத உழைப்பை போடுவதாகவும், கதை சரியாக அமைத்து நடிகர், நடிகைகளை திறம்பட தேர்வு செய்தால் கண்டிப்பாக படம் வெற்றி பெறும் என்று உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இந்தப் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைய உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் கதையை முழுவதுமாக எழுதிவிட்டு அஜித்திடம் காட்டியுள்ளார் விக்னேஷ் சிவன். இதைப் படித்துவிட்டு அஜித் இதில் அரசியல் விமர்சனங்கள் தேவையே இல்லாத ஒன்று, அத்துடன் சம்மந்தமே இல்லாத இடத்தில் பஞ்ச் டயலாக்குகள் எதற்கு இதையெல்லாம் மாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் சில விஷயங்களை மாற்றினால் கதை முழுவதுமாக மாறிவிடும் என்ற பயத்தில் உள்ளாராம் விக்னேஷ் சிவன். மேலும் அஜித்துக்கு பிடித்தபடி இந்த கதையை எப்படி மாற்றுவது என்று தனி அறையில் யோசித்து வருகிறாராம்.