ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பஞ்சாயத்தைக் கூட்டிய விக்னேஷ் சிவனின் பெரியப்பா.. திருமணத்தில் ஆடி போன நயன்தாரா!

நீண்ட நாட்களாக காதலித்துக் கொண்டிருந்த விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் நேற்று கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு ரஜினிகாந்த், விஜய், ஷாருக்கான், அட்லி உட்பட பல திரையுலக நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களது திருமணம் நடைபெறும் மகாபலிபுரத்தில் ரிசார்ட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விக்னேஷ் சிவன் சிறுவயதிலிருந்து பெரியப்பா தான் வளர்த்து வந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் தனது திருமணத்திற்கான பத்திரிக்கையை அவரது பெரியப்பாவிற்கு வைக்கவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

அதாவது ஒரு சில மனக்கசப்புகள் காரணமாகத்தான் விக்னேஷ் சிவன் திருமண பத்திரிக்கை என கூறிவருகின்றனர். ஜூலை 9-ஆம் தேதி ஆன நேற்று விக்னேஷ் சிவன் நயன்தாராவின் திருமணம் காலை 8.30 மணிக்கு மேல் திருமண சடங்குகள் துவங்கிய நிலையில், 10.30 திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஆனால் நேற்றைய தினம் 11 மணிக்கு மேல்தான் சுபமுகூர்த்தம் இருந்திருக்கிறது. அதற்குள்ளேயே விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் நடந்து முடிந்துவிட்டது. சுப முகூர்த்தத்தை விட்டுவிட்டு அவர்கள் இஷ்டப்படி நேரத்தை குறித்து, அதில் திருமணம் நடந்தால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் யாருக்காக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்.

அப்படிதான் விக்னேஷ் சிவனின் பெரியம்மாவும் கோபப்பட்டு இருக்கிறார். இதனால் விக்னேஷ் சிவனின் பெரியப்பா குளிகை நேரத்தில் திருமணம் நடைபெற்றதாகவும் குளிகை நேரத்தில் திருமணம் நடைபெற்றால் திரும்பத் திரும்ப அந்த நிகழ்ச்சி நடைபெறும் என கூறியுள்ளார். இதையெல்லாம் பொருட்படுத்தாத இருவரும் தாங்கள் வாழ்வது தான் எல்லாம் அடங்கி இருக்கிறது என எதார்த்தமாக எடுத்துக்கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் முன்பு திருமணத்தை திருப்பதியில் நடத்த ஏற்பாடு செய்து, அதன் பிறகு சென்னையில் வசதிக்காக ஏற்பாட்டை மாற்றி அமைத்தால் தெய்வ குத்தம் வரக்கூடாது என்பதற்காக அங்கு சென்று தரிசனம் செய்திருக்கின்றனர். இவர்களது திருமணத்திற்கு வந்த பலரும் அவர்களது ரசிகர்களும் தற்போது நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவருக்கும் புதுமணத் தம்பதியருக்கு திருமண வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News