சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கோயில் கோயிலாய் சுத்தினது இதுக்குத்தானா?.. 2வது திருமணத்திற்கு தயாரான விக்னேஷ் சிவன்

சில நாட்களுக்கு முன்பு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் திருமணமும் கோலாகலமாக மிகவும் சிறப்புடன் நடந்து முடிந்தது. திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து புதுமண தம்பதிகள் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரல் ஆனது. மேலும் தற்போது இந்த ஜோடி கேரளாவிற்கு சென்றுள்ளது. திருமணம் முடிந்து முதல் முறையாக தன் பிறந்த வீட்டிற்கு சென்ற நயன்தாரா தற்போது கொச்சியில் இருக்கும் கோவில்களுக்கு தன் கணவருடன் சென்று வருகிறாராம்.

இவர்களின் திருமணத்திற்கு முன்பிருந்தே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் குலதெய்வம் கோவில், திருப்பதி உள்ளிட்ட பல கோவில்களுக்கு சென்று வந்தனர். ஒருவேளை திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு செல்கிறார்கள் என்று பலரும் நினைத்து வந்தனர்.

ஆனால் இந்த ஜோடி கோவில் கோவிலாக சுற்றுவதற்கு பின்னால் ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. அதாவது நயன்தாராவின் ஜாதகப்படி மாங்கல்ய தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இரண்டும் இருக்கிறதாம். அதற்கான பரிகாரங்கள் செய்வதற்காகவே அவர்கள் எல்லா கோவில்களுக்கும் சென்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் இருவருக்கும் பரிகாரம் செய்யும் பொருட்டு மீண்டும் திருமணம் நடைபெற இருக்கிறதாம். அதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விக்னேஷ் சிவன் மீண்டும் ஒருமுறை நயன்தாராவின் கழுத்தில் தாலிகட்ட இருக்கிறார்.

ஏற்கனவே பிரபல ஜோதிடர் ஒருவர் நயன்தாராவின் திருமண வாழ்வு சிறப்பாக இருக்காது என்று ஒரு குண்டை போட்டார். தற்போது வரும் இது போன்ற தகவல்கள் நயன்தாராவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் இந்த தம்பதிகள் நீண்டகாலம் மனமொத்து வாழ வேண்டும் என்று பலரும் அவர்களுக்கு ஆசி கூறி வருகின்றனர்.

Trending News