ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

தனுஷுடன் விருப்பமில்லாமல் நடித்த விக்னேஷ் சிவன்.. இப்படி உண்மையை வெளிப்படையா சொல்லிட்டீங்களே பாஸ்

விக்னேஷ் சிவன் மிகக்குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் படம் வெளியானது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தற்போது வரை உலகம் முழுவதும் 62 கோடி வசூல் செய்ததாக விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்குனர் மட்டும் இல்லாமல் சில படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தில் ஒரு பாடலுக்கு வரிகள் எழுதி இருந்தார். இதைத்தொடர்ந்து அஜித்தின் வலிமை படத்திலும் பாடலாசிரியராக பணியாற்றியிருந்தார்.

அந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்நிலையில் ஆரம்பத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விக்னேஷ் சிவன் நடித்திருப்பார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவனிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது விருப்பம் இல்லாமல் தான் அந்த படத்தில் நடித்ததாக விக்னேஷ் சிவன் கூறினார். ஏனென்றால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் அன்று வரவில்லையாம்.

அதனால்தான் விக்னேஷ் சிவன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தாராம். இதனால் அவருக்கு நடிப்பதில் விருப்பம் இல்லை என்பது தெரிகிறது. ஆரம்பத்தில் இயக்குனராக பணியாற்றிய பலர் தற்போது நடிகர்களாக மாறிய நிலையில் விக்னேஷ் சிவன் தொடர்ந்து படங்களை இயக்குவதில் தான் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News