ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

100% என்னை நம்புங்க.. அடுத்த படத்திற்காக கதறும் விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு இப்படத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி என உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இவர்களை வைத்த விக்னேஷ் சிவன் ஒரு மோசமான படத்தை கொடுத்துள்ளார் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார் என்ற தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கயுள்ளார்.

இந்நிலையில் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் தன்னுடைய 61 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அஜித், விக்னேஷ் சிவனுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை போல அஜித் படத்தை சொதப்பி விடக் கூடாதே என்ற பயத்தில் உள்ளார் விக்னேஷ் சிவன். ஏனென்றால் அஜித் ரசிகர்கள் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். இதனால் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் என்னுடைய நூறு சதவீத உழைப்பையும் போடுவேன்.

அஜித் சாரின் ரசிகர்கள் அவர்மீது மிகுந்த அன்பு வைத்து உள்ளனர். அவர்களை திருப்திபடுத்தும் வகையில் நான் இப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற பொறுப்பு என்னிடத்தில் உள்ளது. மேலும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இந்த படத்தில் இருக்கும்.

படத்தின் ஸ்கிரிப்ட்டை முடித்த பிறகு நடிகர், நடிகைகள் தேர்வு செய்து ஒரு நல்ல டீமை அமைத்து முழு கவனம் செலுத்தும் போது ஒரு நல்ல படத்தைப் கொடுக்க முடியும் என நம்புகிறேன் என விக்னேஷ் சிவன் உறுதியளித்துள்ளார். மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Trending News