வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நயன்தாராவை இம்ப்ரஸ் செய்ய 25 கோடியா.! தனுஷை கொல காண்டாக்கிய விக்னேஷ் சிவன்

Nayanthara: சோசியல் மீடியாவை திறந்தாலே நயன்தாரா விட்ட அறிக்கையின் எதிரொலிதான் அதிகமாக இருக்கிறது. நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் அவருடைய திருமண வீடியோ டாக்குமென்டரி ஆக இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின் வெளியாவதால் இதற்கு பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இருக்கவில்லை. அதனாலயே ஒரு ப்ரமோஷன் செய்து பரபரப்பை கிளப்ப நயன்தாரா தனுஷை பகடைக்காயாக உபயோகப்படுத்தி இருக்கிறார்.

இப்படித்தான் தற்போது கருத்துக்கள் பரவிக் கொண்டிருக்கிறது. உண்மையில் நயன்தாரா தனக்கு ஆதரவு கிடைக்கும் என்று நினைத்து தான் இந்த பிளானை போட்டுள்ளார். ஆனால் தற்போது தனுசுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

உண்மையில் இந்த சர்ச்சைக்கு பின் பல வருட புகைச்சல் இருக்கிறது. நானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரித்த போது பெரும் மனக்கசப்புகள் இருந்திருக்கிறது. அதுதான் இப்போது பூகம்பமாக வெடித்துள்ளது.

தனுஷை கோபப்படுத்திய விக்னேஷ் சிவன்

அதாவது அப்படம் தொடங்கும் போது நயன் விஜய் சேதுபதி சம்பளம் தவிர்த்து 4 கோடியில் முடிக்க வேண்டும் என பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது. ஆனால் ஷூட்டிங் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே விக்கி நயன் காதல் ஆரம்பித்துவிட்டது.

அப்போது விக்கி நயன்தாராவை இம்ப்ரஸ் செய்ய சில வேலைகளை பார்த்திருக்கிறார். அதன்படி சில காட்சிகள் ரீஷூட் செய்யப்பட்டு 30 நாட்கள் இழுத்துள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட் 18 கோடி வரை சென்றுவிட்டதாம்.

அதை அடுத்து படமும் கொஞ்சம் தாமதமாக வெளியாகி இருக்கிறது. இதனால் தனுசுக்கு 25 கோடி வரை செலவாகி இருக்கிறது. படம் ஹிட்டானதால் அவர் தப்பித்தார். இல்லையென்றால் நஷ்டம் தான்.

இதுதான் பிரச்சினையின் மூல காரணம் அதை அடுத்து டாக்குமென்டரி படத்தில் நானும் ரவுடிதான் பட காட்சியை சேர்க்க முறையான அனுமதியையும் வாங்கவில்லை. அதிலும் விக்கி சில தில்லுமுல்லு வேலையை பார்த்திருக்கிறார்.

அதனால் தான் தனுஷ் முடிஞ்சத பாத்துக்கோ என நோட்டீஸ் விட்டுள்ளார். இப்படி ஒவ்வொரு உண்மையாக வெளிவரும் சூழலில் நயன்தாராவின் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்துள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்ற சில வார்த்தைகளும் அவர்களுக்கே எதிர்வினையாக மாறி உள்ளது.

Trending News