தென்னிந்திய சினிமாவின் ராணியாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாராவை பிரபலம் இல்லாத இளம் இயக்குனர் எப்படி காதலில் வீழ்த்தினார் என்பது தற்போது வரை பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
அதற்கு சில காலங்களுக்கு முன்பு தான் பிரபுதேவாவுடனான காதல் முறிந்தது. அதன் பிறகு நயன்தாரா இனிமேல் காதல் சர்ச்சையில் சிக்க மாட்டார் என பலரும் பேசி வந்த நிலையில் இளம் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். அதன்பிறகு இருவரும் அடித்தகூத்து ஊருக்கே தெரியும்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும்போது எப்படி பீல் பண்ணுவார் என்பதை முதல் முறையாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஓப்பனாக தெரிவித்துள்ளார். நயன்தாரா ஆண் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும்போது விக்னேஷ் சிவனுக்கு பொறாமையாக இருக்குமாம்.
இருந்தாலும் நடித்தால் தானே சம்பளம் என்பதால் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்து விடுவாராம். ஆனால் இந்தமுறை காற்றுவாக்கில் இரண்டு காதல் படத்தில் நயன்தாரா இவருடன் ஜோடியாக நடிப்பதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அதே சமயத்தில் முதல் முறையாக பொறாமைப்படாததும் இப்போதுதான் என குறிப்பிட்டுள்ளார்.
அது வேறு ஒன்றும் இல்லை. நயன்தாரா சமந்தா ஆகிய இருவரும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. இந்த படத்தை புரமோட் செய்வதற்காக விக்னேஷ் சிவன் கொடுத்த பில்டப் தான் இந்த பொறாமை மேட்டர்.