விஜய்சேதுபதி ஹிந்தியில் முதல்முதலாக கால் பதிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு மும்பைக்கார் என பெயர் வைத்துள்ளனர்.
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மாநகரம்.
மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் சினிமா வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிக்கலான கதையை தெளிவாக மக்களுக்கு புரிய வைத்திருந்தார்.
இந்நிலையில் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வாங்கி ஹிந்தியில் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமீர் கான் படத்தில் கமிட் ஆகியிருந்த விஜய் சேதுபதி திடீரென அந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டார். இதனால் தற்போது ஹிந்தியில் முதல் முதலாக விஜய் சேதுபதி கால்பதிக்கும் திரைப்படமாக மாறியுள்ளது மும்பைக்கார்.
மும்பைக்கார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.