வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் க்யூல தான் நிக்கணும்.. விஜய், சூர்யாவை காக்க வைக்கும் இயக்குனர்

டாப் ஹீரோக்களை கவர்ந்த டைரக்டர்கள் என்றால் குறிப்பிட்டு சொல்லும் படியாக சில பேர் தான் இருக்கின்றனர். பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த இயக்குனர்களின் படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் உட்பட பல நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட சில இயக்குனர்கள் முன்னணி ஹீரோக்களின் சாய்ஸாக இருக்கின்றனர். அப்படி அனைவரும் விரும்பும் ஒரு இயக்குனர் தான் வெற்றிமாறன். தன்னுடைய எதார்த்தமான படைப்புகளின் மூலம் தேசிய விருது உட்பட பல விருதுகளை தட்டி தூக்கி இருக்கும் இவர் சமீபத்தில் வெளிவந்த விடுதலை மூலம் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.

Also read: தீபாவளி ரேஸுக்கு தயாராகும் 5 படங்கள்.. ஏலியன் துணையோடு களமிறங்கும் சிவகார்த்திகேயன்

அதைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்காகவே பல நடிகர்களும் போட்டி போட்டு வருகிறார்களாம். அதில் தனுஷ் வடசென்னை இரண்டாம் பாகத்திற்காக வருட கணக்கில் காத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சூர்யா கூட வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்காக வரிசையில் நிற்கிறார். இப்படி எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் காத்திருக்க வேண்டும் என்ற ஒரு இடத்தில் தான் வெற்றிமாறன் இருக்கிறார். அந்த வகையில் விஜய் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கும் இதே நிலைமை தானாம்.

Also read: அஜித்தை திருப்திப்படுத்த முடியாத 4 இயக்குனர்கள்.. மகிழ்திருமேனியால் இழுத்தடிக்கும் ஏகே 62

இப்படி ஒரு கொள்கையோடு இருக்கும் வெற்றிமாறன் எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும் மசியாதவர். எனக்கு கதையின் தரம் தான் முக்கியம். அதற்காக எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருந்து படம் எடுப்பேன் என்று தைரியமாக இவர் கூறி வருகிறார். இதுவே இவருடைய படங்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

மேலும் அவருடைய திரைப்படங்கள் வருடங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்பதற்கும் வெற்றிமாறன் ஒருவரே காரணமாக இருக்கிறார். அந்த வகையில் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களுக்காக இப்பவே அட்வான்ஸ் தொகை கொடுக்க முன் வந்தாலும் இவர் வேண்டாம் என்று கூறி விடுகிறாராம். இதன் மூலம் அவர் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Also read: விஜயகாந்திடமிருந்து கைநழுவிப்போன 5 வெற்றி படங்கள்.. அய்யாதுரை ஆக நடிக்க இருந்த கேப்டன்

Trending News