திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நேருக்கு நேராக விஜய் சேதுபதியுடன் மோதும் விஜய் ஆண்டனி.. உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்ட படம்

கோலிவுட் சினிமா ரசிகர்களை பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் வெள்ளிக்கிழமை அன்று எந்த படம் ரிலீஸ் ஆகும் என ரொம்பவும் ஆவலுடன் காத்திருப்பார்கள். சில நேரங்களில் ஒரு படம் மட்டுமே ரிலீஸ் ஆகும். சில நேரத்திலோ ஒட்டுமொத்தமாக ஐந்தாறு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை திணறடித்து விடும். அந்த வகையில் அடுத்த வாரம் இரண்டு முக்கிய ஹீரோக்களின் படங்கள் மோத இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முதன்முதலாக விஜய் சேதுபதி மற்றும் விஜய் ஆண்டனியின் படங்கள் நேருக்கு நேர் மோத இருக்கின்றன இதில் எந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெறும் எந்த படம் ஜெயிக்கும் என தற்போது வரை கணிக்க முடியாத சூழ்நிலை தான் இருக்கிறது. இதற்கு காரணம் இருவருமே வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடிய நடிகர்கள் தான்.

Also Read:அஜித் விஜய்க்கு அடுத்த வரிசையில் இருக்கும் ஐந்து ஹீரோக்கள்.. தொடர் தோல்வியால் வாய்ப்பு இழந்த விக்ரம்

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரேகா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் தான் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் மேகா ஆகாஷ், மோகன் ராஜா, மகிழ்திருமேனி, கனிகா, ரித்விகா போன்ற நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது. தற்போது மீண்டும் தூசி தட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்பு இயக்கப்பட்ட கதை என்பதால் திரைக்கதை மற்றும் பின்னணி எப்படி இருக்கும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.

Also Read:விஜய் பாணியில் ஷாருக்கான் செய்த விஷயம்.. ஜவான் படத்தை பற்றி அவரே சொன்ன அப்டேட்

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்த திரைப்படம் பிச்சைக்காரன். வித்தியாசமான கதைக்களத்துடன் ரிலீசான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தன் தாயின் உடல்நிலை சரியாக வேண்டி பிச்சை எடுக்கும் ஹீரோ சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த கதை வெளியானது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, தயாரித்து, நடித்து வருகிறார். இந்த படமும் 19 தேதி தான் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் காரணமாக விஜய் ஆண்டனி பலத்த காயமடைந்தார். தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் திரையில் மோதுகிறார்.

Also Read:விஜய்யும் இல்ல, அஜித்தும் இல்ல, அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான்.. தேரை இழுத்து தெருவில் விடும் இயக்குனர்

Trending News