விஜய் டிவியில் என்னதான் பிரமாண்டமான நிகழ்ச்சிகளும் ரசிகர்களை கவரும் வண்ணம் இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் சன் டிவி நிறுவனம் எப்போதுமே வாரக்கடைசியில் நம்பர் 1 இடத்தை பிடித்து விடுகிறது.
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இல்லாத ரசிகர்களே கிடையாது. ஒரு சமையல் நிகழ்ச்சியை செம என்டர்டெயின்மென்ட்டாக கொடுத்து வருகின்றனர்.
இந்த குப் வித் கோமாளி நிகழ்ச்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருந்து வருகிறது. அதேபோல் விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுவது தான் பிக் பாஸ். கடந்த பொங்கலன்று பைனல் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் வாரம் டிஆர்பியில் கண்டிப்பாக விஜய் டிவிதான் முதலிடத்தை பிடிக்குமென அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென சன் டிவி நிறுவனம் வழக்கம்போல் முதலிடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அதற்கு காரணம் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பான விஸ்வாசம் திரைப்படம் தான். அஜித்-சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியிருந்த விஸ்வாசம் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சன் டிவி டிஆர்பியிலும் முதலிடம் பிடித்தது.
இத்தனைக்கும் தீபாவளிக்கு வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தை சன் டிவியில் முதல்முறையாக ஒளிபரப்பியும் கூட தல அஜித்தின் விஸ்வாசம் படம் முதல் இடத்தை பிடித்துள்ளது, விஸ்வாசம் திரைப்படம் எந்த அளவு குடும்ப ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது.