வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் 130 கோடி எல்லாம் ஒரு சம்பளமா? எம்ஜிஆரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆவேசமாக பேசிய எஸ்ஏசி

தளபதி விஜயின் தந்தையான எஸ்ஏசி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தனது மகன் விஜய் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தனர். தற்போது எஸ்ஏசி யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார்.

அதில் தனது வாழ்வில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சரவணனை வைத்து எஸ்ஏசி ஒரு படத்தை இயக்கியுள்ளார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவரிடம் தற்போது ஹீரோக்கள் 130 கோடி சம்பளம் அதிகமாக வாங்குகிறார்களே என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

Also Read : செகண்ட் இன்னிங்ஸில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்யத் துடிக்கும் 5 நடிகைகள்.. விஜய், அஜித் உடன் நடிக்க போகும் இளவரசி

அதாவது விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்கள் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெற்று வருகிறார்கள். இதில் விஜய்க்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதால் சூசகமாக செய்தியாளர்கள் இந்த கேள்வியை கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு எஸ்ஏசி 130 கோடியெல்லாம் ஒரு சம்பளமா என கேட்டிருந்தார்.

அதாவது அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று உங்களுக்கு தெரியுமா. அப்போது 20 முதல் 25 லட்சம் வரை எம் ஜி ஆர் சம்பளம் வாங்கி இருந்தார். இப்போதைய காலகட்டத்தில் அது 200 கோடிக்கு சமம். ஆகையால் தற்போது உள்ள ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் மிகவும் குறைவு தான் என எஸ்ஏ சி கூறியுள்ளார்.

Also Read : அக்கட தேசத்திலும் டான் ஆன தளபதி.. சிரஞ்சீவி பாலையாவை ஓரம் கட்டிய விஜய்

மேலும் நான் இயக்குனராக இருந்த காலகட்டத்தில் கூட 40 முதல் 45 லட்சம் வரை சம்பளமாக பெற்றேன். இப்போது அதை கணக்கிட்டால் கூட 40 கோடிக்கு சமமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்கள் ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டாலும் மகனை விட்டுக் கொடுக்காமல் எஸ்ஏசி பேசி உள்ளார் என பலரும் கூறி வருகிறார்கள்.

ஆனால் தற்போது உள்ள தயாரிப்பார்கள் படத்தின் பட்ஜெட்டை விட ஹீரோக்களின் சம்பளம் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைத்து வருகிறார்கள். மேலும் படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சம்பளம் கொடுப்பதால் அதற்கும் சேர்த்து வட்டி கட்டுவதாக தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.

Also Read : விஜய்க்கு பயத்தை காட்டிய அஜித்.. துணிவை தட்டி தூக்க தளபதி எடுத்த பிரம்மாஸ்திரம்

Trending News