வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

லியோவை விட அதிக விலைக்கு போன விஜய் 68.. அநேகத்துக்கு வெங்கட் பிரபுவிடம் அசிங்க பட போகும் லோகேஷ்

Leo – Vijay 68: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் 10 நாள் பேட்ச் வேலைகளுக்காக நடிகர் விஜய் தவிர, லியோ படக்குழு அனைவரும் தற்போது காஷ்மீருக்கு சென்றிருக்கிறார்கள். இந்த வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு தான் படத்தின் ஆடியோ லாஞ்ச் எப்போது என்று தெரியும்.

லியோ படத்தின் வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது விஜய் தன்னுடைய 68வது படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தார். மங்காத்தா மற்றும் மாநாடு போன்ற வித்தியாசமான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு தான் விஜய்யின் 68 வது படத்தை இயக்க இருக்கிறார்.

Also Read:பல வருடம் கழித்து ஆண் குழந்தைக்கு அம்மாவான விஜய் பட நடிகை.. வைரலாகும் வித்தியாசமான பெயர்

விஜய் 68 அப்டேட்டுகள் எந்த விதத்திலும் லியோ படத்தின் ஹைப்பை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ளுமாறு விஜய் ஏற்கனவே வெங்கட் பிரபுவுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதையும் தாண்டி அந்த படத்தில் ஜோதிகா மற்றும் ஜெய் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த படத்தில் மற்றொரு வியாபாரத்தை பற்றிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

விஜய் 68 படத்தின் ஆடியோ உரிமம் மட்டும் ரூபாய் 25 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பேசப்பட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் எல்லோரையுமே ரொம்பவே ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படத்தின் ஆடியோ உரிமம் வெறும் 15 லட்சத்திற்கு தான் விற்கப்பட்டது.

Also Read:லியோ ஆடியோ வெளியீடு, மண்ணை அள்ளிப் போட்ட லோகேஷ்.. திருப்பி கொடுக்க நினைத்த தளபதிக்கு விழுந்த அடி

ஒரு படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இப்படி ஒரு வியாபார சாதனையை படைத்திருக்கிறது என்றால் அது விஜய் 68 தான். இதற்கு காரணம் நடிகர் விஜய்யா அல்லது வெங்கட் பிரபு- யுவன் சங்கர் ராஜா கூட்டணியா என்பது சரியாக தெரியவில்லை. இருந்தாலும் எல்லா படத்திலும் ஒரு கோடி சம்பளமாக வாங்கும் யுவன் இந்த படத்தில் மூன்று கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

விஜய் 68 ஆடியோ உரிம வியாபாரத்தில் யுவன் சங்கர் ராஜா, அனிருத்தை முந்திவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படம் ரிலீஸ் ஆகி பாடல்கள் ஹிட் அடித்து விட்டால், இசையமைப்பாளர் யுவன் அனிருத்தை பின்னுக்கு தள்ளி அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read:விஜய்யை போலவே அசிங்கப்பட்ட நடிகர்.. வழுக்கைத் தலை, கேவலமான மீசை என அடியோடு வெறுக்கப்பட்ட ஹீரோ

Trending News