வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரு வழியா தளபதி தப்பிச்சிட்டாரு.. விஜய் 68 படத்தை இயக்கும் கலகலப்பான இயக்குனர்

விஜய் தனது 67-வது படமான லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில், இந்த படத்தின் இறுதிக்கட்ட நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சில வாரங்களாகவே விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றது.

இந்த படத்தை திடீரென பாலையாவை வைத்து வீர சிம்ம ரெட்டி என்ற படத்தை எடுத்த இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்குவதாக உறுதியாக கூறப்பட்டது. இவர் மட்டுமல்ல இந்த ரேஸில் அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா என பல இயக்குனர்களும் இடம் பெற்றனர். ஆனால் தற்போது திடீரென வெங்கட் பிரபு பெயர் உள்ளே வந்துள்ளது.

Also Read: உனக்கு 8 எனக்கு 18.. வாயடைக்க வைத்த விஜய் பட ஹீரோயினின் காதல்

இதுதான் உறுதியான தகவல்கள் கூறுகின்றன. விஜய் திடீரென ஒரு கலகலப்பான படத்தை பண்ண வேண்டும், குறைந்த நேரத்தில் படபிடிப்பு முடித்து வெளியிட வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். லியோ படத்தை முடித்து ஒரு கூலான ஜாலியான ஒரு படத்தை பண்ண வெங்கட் பிரபுவை தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தி விட்டார்.

இது எந்த மாதிரியான கதை என்று, கூடிய விரைவில் வெளிவரும். இப்படி ஒரு செய்தியை கேட்டதும் விஜய் ரசிகர்கள் ஆனந்த கண்ணீரில் இருக்கிறார்கள். காரணம் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இடமிருந்து விஜய்யை காப்பாற்றி விட்டார் வெங்கட் பிரபு என மகிழ்ச்சியில் பேசி வருகின்றனர்.

Also Read: தளபதியை வைத்து டிஆர்பியை ஏற்றிய சன் டிவி.. கோட்டை விட்ட விஜய் டிவி

ஏற்கனவே வம்சி இயக்கிய விஜய்யின் வாரிசு படத்தை பார்த்து நொந்து போன ரசிகர்கள் மறுபடியும் தெலுங்குவாடை அதிக வீசும் படத்தில் நடித்து விடுவாரோ என்ற பயத்தில் தளபதி ரசிகர்கள் இருந்தனர். ஒருவழியாக வெங்கட் பிரபு எப்படியோ தளபதி 68 படத்தை கைப்பற்றி இருக்கிறார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் விஜய்- வெங்கட் பிரபு படத்தில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறாராம். இதனால் இந்த படத்தில் காமெடிக்கும் கலகலப்பு இருக்கும் பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர். மேலும் இந்த படத்தை ஆர்.பி சவுத்ரி சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் 100-வது படமாக தயாரிக்க இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: பார்த்திபனாக மாறிய விஜய்.. இணையத்தில் லீக்கான லியோ சீக்ரெட்

Trending News