செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

ரிலீஸுக்கு முன்னரே பீஸ்ட்டை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்.. அஜித்தின் வலிமையை மிஞ்சிய விஜய்

அஜித் ரசிகர்கள் எப்படி வலிமை படத்திற்காக காத்து கொண்டிருக்கிறார்களோ அதேபோல விஜய் ரசிகர்கள் அவர் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் வெளியீட்டிற்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக இயக்கிய இரண்டு படங்களுமே வெற்றி படங்களாக அமைந்த நிலையில் தற்போது நெல்சன் மூன்றாவதாக விஜயை வைத்து இயக்கி வரும் படம் தான் பீஸ்ட். நெல்சன் மற்றும் விஜய் காம்போவில் முதல் முறையாக பீஸ்ட் படம் உருவாகி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

பல இடங்களில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதெல்லாம் படங்கள் தியேட்டரில் வெளியானாலும் படம் வெளியான சில தினங்களிலேயே ஏதேனும் ஒரு ஓடிடி தளத்திலும் வெளியாகி விடுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களுமே தியேட்டர் வெளியீட்டை தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் வெளியீட்டிற்கு பிந்தைய டிஜிட்டல் தியேட்டரிகல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பீஸ்ட் வெளியான பின்னர் இந்த ஓடிடி தளங்களில் அதை ரசிகர்கள் பார்த்து மகிழலாம். வலிமை படத்தின் சாட்டிலைட்  மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் கிட்டத்தட்ட 200 கோடி வினியோகம் ஆகியுள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாம்.

Advertisement Amazon Prime Banner

Trending News