வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன்.. பட்டிதொட்டியெல்லாம் கொண்டாட போறாங்க

நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தளபதியின் 65 படமான பீஸ்ட் படத்தில் செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் என பலர் நடித்துள்ளார்கள்.

பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. பீஸ்ட் படத்தில் ஒரு பாடலுக்கான வரியை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதுவார் என்ற சலசலப்பு இணையத்தில் வெளியானது.

தற்போது இந்த செய்தி உறுதியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா, நம்ம வீட்டு பிள்ளை, ஆதித்யா வர்மா, டாக்டர் ஆகிய படங்களில் பாடல் வரிகள் எழுதியுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் பீஸ்ட் படத்தில் ஒரு பாடலுக்கான வரியை எழுதி உள்ளார்.

சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் வரிகளைக் கொண்டு பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் அந்தப் பாடலை பாடியுள்ளார். பீஸ்ட் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். பீஸ்ட் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது.

சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் திலிப்குமார், அனிருத் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் மூவரும் ஒன்றாக இணைந்து டாக்டர் படத்தில் பணியாற்றி உள்ளார்கள். இதனால் சிவகார்த்திகேயன் பீஸ்ட் படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார். இந்தப் பாடல் பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என படக்குழு எதிர்பார்க்கிறார்கள்.

இவர்கள் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் முதல் பாடலாக படக்குழு வெளியிடும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் பட்டிதொட்டியெல்லாம் இந்த பாடல் ஒலிக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

beast-vijay-latet
beast-vijay-latet

Trending News