திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தன் பெயரிலேயே விஜய் நடித்த 7 திரைப்படங்கள்.. அதுல பாதி படம் அவரை சோதித்துவிட்டது

இளைய தளபதி விஜய் தனது சொந்த பெயரிலையே ஏழு படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்கள் ஹிட் ஆனாலும் சில படங்கள் தோல்வி அடைந்துள்ளன. அந்த படங்களின் லிஸ்டை பார்த்தாலே தெரியும்.

நாளைய தீர்ப்பு: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஷோபா சந்திரசேகர் திரைக்கதையில் 1992 இல் வெளியான திரைப்படம் நாளைய தீர்ப்பு. இப்படத்தில் விஜய், கீர்த்தனா, ராதாரவி, ஸ்ரீவித்யா, சரத்பாபு என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் விஜய் தன் பெயரிலேயே நடித்திருந்தார். இப்படத்திற்கு மணிமேகளை இசையமைத்திருந்தார்.

4-nalaiya-theerpu-vijay-debut-movie
4-nalaiya-theerpu-vijay-debut-movie

செந்தூரப்பாண்டி: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பி விமல் தயாரிப்பில் வெளியான திரைப்படம் செந்தூரப்பாண்டி. இப்படத்தில் விஜய், யுவராணி, மனோரம்மா என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் கௌரவ வேடத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தில் விஜயகாந்த் செந்தூரப்பாண்டியாகும், விஜய் விஜய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ஒன்ஸ்மோர்: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஒன்ஸ்மோர். இப்படத்தில் சிவாஜிகணேசன், சரோஜாதேவி, விஜய், சிம்ரன் என பலரும் நடித்திருந்தார்கள். திரைப்படத்தில் விஜய், சிம்ரன் இருவரும் விஜய், கவிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

once more
once more

வசந்தவாசல்: விஜய், சுவாதி, மன்சூர்அலிகான், வடிவேலு, கோவை சரளா என பல பிரபலங்கள் நடித்த திரைப்படம் வசந்த வாசல். இது அதிரடி காதல் திரைப்படமாக வெளிவந்தது. இப்படத்தில் விஜய் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று வெறித்தனமாக இருப்பார்.

நேருக்கு நேர்: வசந்த் இயக்கத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா, ரகுவரன், சாந்தி கிருஷ்ணா நடித்த திரைப்படம் நேருக்கு நேர். இத்திரைப்படத்தில் விஜய் விஜயாவும், சூர்யா சூர்யாவாகவும், ரகுவரன் ரகு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற்றது.

Nerukku Ner
Nerukku Ner

பிரியமானவளே: கே செல்வபாரதி இயக்குகிறார் 2002 ல் வெளிவந்த திரைப்படம் பிரியமானவளே. இப்படத்தில் விஜய், சிம்ரன், எஸ் பி பாலசுப்ரமணியம், விவேக், வையாபுரி என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் விஜய், சிம்ரன் இருவரும் விஜய், பிரியா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் அக்ரிமெண்ட் திருமணம் என்பது பெரிதும் பேசப்பட்டது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தெறி: கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தெறி. இத்திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, ராதிகா, மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் விஜய் போலீஸாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

Trending News