வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யின் கேரியரை உயர்த்திய விக்ரமன்.. கிளைமாக்ஸை மாற்றியதால் படம் ஹாட்ரிக்

நடிகர் விஜய் தனது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பல திரைப்படங்களில் தனது ஆரம்ப காலகட்டத்தில் நடித்திருந்தார். விஜயின் முகமும், அவரது நடிப்பும் அன்றைய ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த நிலையில், எஸ் ஏ சந்திரசேகரின் திரைப்படங்களும் விஜய்க்கு பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை.

எப்படியாவது படத்தில் நடித்து ஹிட் கொடுக்க வேண்டும் என்ற தருவாயில் விஜய் இருந்த நிலையில், இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்து அசத்தினார். 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் சங்கீதா, நாகேஷ், சார்லி, மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பர்.

Also read: கம்மென்றும் உம்மென்றும் மாறிய வாரிசு படக்குழு.. சொந்தக்குரலில் பாடிய பாடலுக்காக விஜய் விட்ட டோஸ்

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்த இப்படத்தை தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி தயாரித்து இருந்தார். இப்படத்தில் வரும் விஜய்யின் கதாபாத்திரம், தனது காதலி குடும்பத்தில் உள்ள அனைவரது சம்மதத்தோடு தனது காதலரை மணந்து கொள்ள விரும்பிய நிலையில், அவர்களை சேர்த்து வைக்க போராடும் ஒருதலை காதலராக விஜய் இத்திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

பூவே உனக்காக திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், விஜய்க்கு ஜோடியாக நடிகை சங்கீதா நடித்த போதிலும் அவரை திருமணம் செய்யாமல் மனதில் நின்ற காதலியே மரணம் வரை என்ற வசனத்தோடு ஒரு தலை காதலனாக விஜயின் நடிப்பு, அத்திரைப்படம் பார்ப்போரின் கண்களில் கண்ணீரோடு செல்லும் அளவிற்கு விக்ரமன் இயக்கியிருப்பார்.

Also read: விஜய்யுடன் கூட்டணி போட நடையாய் நடந்த இயக்குனர்.. தளபதியை இம்ப்ரஸ் செய்த கதாபாத்திரம்

அப்படிப்பட்ட இத்திரைப்படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகள் இருந்ததாம், முதலில் விக்ரமனின் கிளைமாக்ஸ் காட்சி மற்றொன்று விஜய், சங்கீதாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வது போன்ற காட்சியை தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி எடுக்க சொன்னாராம். விக்ரமனும் அந்த கிளைமாக்ஸ் காட்சியை எடுத்திருந்த நிலையில்,அந்த கிளைமாக்ஸ் காட்சியை படத்தில் வைக்க வேண்டாம் என ஆர்பி சவுத்ரியிடம் விக்ரமன் கெஞ்சினாராம்.

இப்படித்தான் இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இடம்பெற்றதாம். இன்று நடிகர் விஜய் எத்தனையோ திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் பூவே உனக்காக திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலருக்கும் விருப்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: டென்ஷனில் இருக்கும் விஜய்.. சைடு கேப்பில் அவர் ரூமுக்கு போய் மணிக்கணக்கில் கூல் செய்த சம்பவம்

Trending News