ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இந்தியளவில் சாதனை படைத்த தளபதி 66.. ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே மாஸ் காட்டிய விஜய்

தெலுங்கு முன்னணி இயக்குனரான வம்சி இயக்கத்தில் தளபதி 66 படம் விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே தளபதி 65 ஆவது படம் ரிலீசுக்கு தயாராக உள்ள இந்த சூழ்நிலையில் அடுத்த படத்தின் அப்டேட் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறது.

சமீபகாலமாக வம்சி இயக்கும் தளபதி 66 படத்தை பற்றிய தகவல்தான் சமூகங்களில் வைரலாகி வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் நடிக்கும் 66வது படம் பூவே உனக்காக, துள்ளாத மனம் துள்ளும் படங்களை போல் குடும்ப பாங்கான கதையாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்தார். தற்போது தளபதி 66 படத்தின் சாட்டிலைட் டிஜிட்டல் உரிமையை ஜீ தொலைக்காட்சி வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதற்காக 200 கோடி படக்குழுவினர்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். விஜய் நடிக்கும் தளபதி 66 படப்பிடிப்பு கூட தொடங்காத நிலையில் ஆரம்பத்திலேயே 200 கோடிக்கு பேசியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மேலும் தளபதி 66 திரைப்படம் பிப்ரவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளது கூடிய விரைவில் படத்தினைப் பற்றிய முழு தகவல்கள் வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார் தளபதி. வணிக ரீதியாக 500 கோடி வரை வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News