வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய்க்காக 5 நிமிடக் காட்சியில் நடித்த பிரபல நடிகர்.. தளபதி 66ஐ செதுக்கும் வம்சி

தளபதி 66 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நடிக்க உள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரின் நடிப்பில் தளபதி66 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும் தளபதி66 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும், தற்போது சென்னையில் செட் அமைத்து சூட்டிங் நடைபெற்று வருகிறது. பல வருடங்கள் கழித்து பெண்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் குடும்ப பாங்கான கதையில் தளபதி 66 உருவாகி வருகிறது. மேலும் அப்பா,மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மகேஷ் பாபு தெலுங்கில் நடித்த திரைப்படங்களை தமிழில், நடிகர் விஜய் ரீமேக் செய்து நடித்து ஹிட் கொடுத்துள்ளார் முக்கியமாக கில்லி, போக்கிரி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்கள் மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களாகும்

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வம்சி பைடிபல்லி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் நெருங்கிய நண்பர் என்பதால் தளபதி 66 திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.தமிழில் உருவாகி வரும் இத்திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்படும் நிலையில் வாரிசுடு என்ற டைட்டில் வைத்துள்ளனர்.

வாரிசுடு என்றால் வாரிசு என்பது தமிழின் அர்த்தம் .இந்நிலையில் வாரிசு என்று தமிழில் டைட்டிலாக இருக்க கூடுமோ என்ற தகவல் வந்த நிலையில் விஜயின் பிறந்தநாளின் போது உறுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மகேஷ் பாபுவிற்கு முன் நடிகர் நானி தளபதி 66 திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என செய்திகள் வெளியானது.

ஆனால் இதுகுறித்து நானி தரப்பிலிருந்து மறுக்கப்பட்ட நிலையில் தற்போது மகேஷ் பாபு நடிக்க உறுதியாகி உள்ளார். பீஸ்ட் படத்தின் தோல்வியால் தளபதி விஜய் சோர்ந்துள்ள நிலையில், தளபதி 66 திரைப்படம் வெளியாகி வெற்றியை கொடுக்கும் என நம்புவதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News