வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரெடியாகும் துப்பாக்கி-2.. இந்த தடவ இயக்கப் போவது ஏ ஆர் முருகதாஸ் இல்ல

தளபதி விஜய் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் இத்திரைப்படத்தின் பார்ட் 2 தயாராகி வரவுள்ள அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இதனை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் காஜல் அகர்வால், சத்யா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து அசத்தினர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இத்திரைப்படம் 100 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

இதனிடையே இத்திரைப்படத்தை ஹிந்தியில் நடிகர் அக்ஷய்குமார் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்தார். அங்கேயும் இத்திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இதனிடையே தற்போது துப்பாக்கி-2 திரைப்படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் தற்போது தெலுங்கு சினிமாவில் இயக்கத்தில் பிஸியாக உள்ளதால் துப்பாக்கி 2 திரைப்படத்தை தற்போது தமிழில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், அட்லி, ஹெச்.வினோத் உள்ளிட்டோர் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் அட்லி மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் மாஸ்டர், தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நிலையில் இவர்கள் இருவருக்கும் துப்பாக்கி-2 இயக்குவதில் அதிக வாய்ப்புகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் துப்பாக்கி திரைப்படத்தை தயாரித்த நிலையில், துப்பாக்கி-2 திரைப்படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூடிய விரைவில் துப்பாக்கி 2 திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் என்ற செய்தியை கேட்ட ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Trending News