வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அதிரடி காட்டும் TVK தலைவர், 100 மாவட்டச் செயலர்கள்.. 3 லட்சம் நிர்வாகிகள்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி கடந்த பிப்ரவரி விஜய்யால் ஆரம்பிக்கப்பட்ட து. இக்கட்சிக்கு என தனிக் கொடியும், கொடிப்பாடலும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் வெற்றிக் கொள்கை திருவிழா என்ற பெயரில் பிரமாண்டமான மாநாட்டை நட த்தி தன் கட்சிக் கொள்கைகளை அறிவித்தார் விஜய்.

அதன்பின் தமிழகம் முழுவதும் தவெகவின் கட்சிக் கொள்கைகள் பற்றிப் பேசுபொருளானது. தற்போது தன் கட்சிக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், வரும் தேர்தலுக்கு முன் கட்சியைப் பலப்படுத்தவும் பல வித முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் விஜய்.

100 மாவட்டச் செயலாளர்கள், 3 லட்சம் நிர்வாகிகள்

அதன்படி, விஜய் விரைவில் தமிழ் நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தவெகவுக்கு 100 மாவட்டச் செயலாளர்களையும், 28 சார்பு அணி நிர்வாகிகளையும் நியமிக்கவிருப்பதாக தகவல் வெளியாகிறது.

மேலும் 28 சார்பு அணி நிர்வாகிகளை குறிக்கவே கட்சிக் கொடியில் 28 நட்சத்திரங்கள் இடம்பெற்றதாக் கூறப்படும் நிலையில், இன்னும் 2 மாதங்களில் 100 மாவட்டச் செயலாளர்களையும், 28 சார்பு அணி நிர்வாகிகளையும் நியமித்து கட்சியை பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே திராவிட கட்சிகள் மற்றும் மற்ற கட்சிகளில் எல்லா மாவட்டங்கள், மண்டலங்கள் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கட்சிக்கு தொண்டர்கள் நியமனம் உள்ளிட்டவை நடந்து வரும் நிலையில், இது தேர்தல் காலத்தில் தேர்தல் முகவர்களை நியமிக்கவும் உதவும்.

இந்த நிலையில் திமுகவிலும் அதிமுகவில் 2 அல்லது 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி வரும் நிலையில் அதேபோல் தவெகவிலும் புதிய மாவட்ட செயலாளர்களையும், சார்பு அணி நிர்வாகிகளையும் நியமித்து, அதன் மூலம் ஒட்டுமொத்த 3 லட்சம் முதல் 3 லட்சத்து 25 ஆயிரம் நிர்வாகிகளை நியமிக்க விருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

2026 தேர்தலுக்கு ஆயத்தம்

இன்னும் 4 மாதங்களுக்குள் முடிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் உறுப்பினர்கள் சேர்க்கை, உறுப்பினர்களுக்கு கார்டு இதெல்லாம் வழங்கப்படும், அதேபோல் 4 மாதங்களுக்குள் தவெகவின் உட்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் முடித்திடவும் 2026 தேர்தலுக்கு முழு வீச்சில் தொண்டர்கள், நிர்வாகிகள், ம.செ.,களைத் தயார்படுத்த விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Trending News