வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய் நடிக்கும் கடைசி படம் 69 இல்ல 70.. அட்லீ செய்ய போகும் சம்பவம்

நடிகர் விஜய் ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படம்தான் கடைசி படம் என் விஜய் அறிவித்திருந்தார். அதற்க்கு பிறகு அரசியலில் களம் காணும் நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தற்போது வெளிவந்த தகவல், தமிழ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

ஆம். முன்னதாக 69 ஆவது படத்தில் நடித்து முடித்தபின்னர், விஜய் 70 ஆவது ஒரு படத்தில், நலிந்த தயாரிப்பாளர்களுக்காக இலவசமாக நடித்துக்கொடுப்பார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், அதற்க்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார். ஆனால் தற்போது, உண்மையிலேயே 70 ஆவது படத்தில் நடிக்க போகிறார் விஜய் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது.

பாலிவுட்டில் நடிக்கப்போகும் விஜய்

‘ராஜா ராணி’, ‘மெர்சல்’, ‘தெறி’, ‘பிகில்’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் அட்லீ. அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘ஜவான்’. ஷாருக்கான் நடிப்பில் வெளியான இந்த படம் ரூ. 1000 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது.

‘ஜவான்’ படத்தையடுத்து சல்மான் கான் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் அட்லீ என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த நிலையில், அட்லீ இயக்கவுள்ள இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள விஜய், அதே படத்தில் பாடல் ஒன்றுக்கும் நடனமாட உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Trending News