திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய், அஜித் சினிமாவை விட்டுப் போகணும்னு ஆசைப்படும் 5 நடிகர்கள்.. ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏங்கும் தங்கலான்

தற்போது தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில், அஜித், விஜய் படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு மாஸ் காட்டி வரும் இவர்களின் சம்பளமும் கோடிக்கணக்கில் இருக்கிறது. இதைக் கண்டு சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கே பொறாமையை ஏற்படுத்தும் விதமாக இருந்து வருகிறது.

அவ்வாறு நல்ல படங்களை கொடுத்து மார்க்கெட்டில் பெயர் எடுத்து வரும் இவர்கள் சினிமா விட்டு போனால் நல்லா இருக்கும் எனவும் நினைக்க தொடங்கி விட்டனர். அவ்வாறு இவர்கள் இருவரும் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று ஆசைப்படும் 5 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read:அஜித்தின் அழகில் மயங்கி காதலித்த 5 நடிகைகள்.. திருமணத்திற்கு பிறகும் கூட விடாமல் துரத்திய ஹீரோயின்

சூர்யா: தன் நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்பொழுது கங்குவா படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். இதுவரை இவரின் சம்பளமாக பார்க்கையில் 30-35 கோடி இருந்து வரும் நிலையில் டாப் ஹீரோக்கள் ஆன விஜய் மற்றும் அஜித், சினிமா மீது கொண்ட ஆர்வம் குறைவதன் காரணமாக அந்த இடத்தை பிடித்தால் 100 கோடி சம்பளத்தை பெறலாம் என்ற ஆசையில் இருந்து வருகிறார்.

விக்ரம்: பன்முகத் திறமை கொண்ட இவர் பல வெற்றி படங்களை கொடுத்து டாப் ஹீரோக்களுக்கு இணையாக தான் இருந்து வருகிறார். இருப்பினும் தற்பொழுது அஜித், விஜய்யின் ஆர்வம் வேறு விதத்தில் செல்வதால், அந்த இடத்தை இவர் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று போட்டி போட்டு தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தற்பொழுது 20-25 கோடி சம்பளம் வாங்கும் இவர் 100 கோடி சம்பளத்தை பெற இது போன்ற செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறார் விக்ரம்.

Also Read: எங்களுக்கு கையேந்தி பவன் உங்களுக்கு சரவண பவனா? பாலாவால் அருண் விஜய்க்கு வந்த சோதனை

சிம்பு: ரீ என்ட்ரிக்கு பிறகு பல வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது கமல் புரொடக்ஷனில் கமிட்டாகி இருக்கிறார். இவர் இதுவரை 30-35 கோடி சம்பளமாக பெற்று வரும் நிலையில் தற்பொழுது விஜய் -அஜித் சினிமாவில் இருந்து விலகும் செய்தியை கொண்டு அந்த இடத்திற்கு தன்னை தயார் படுத்தி வருகிறார். இதை தொடர்ந்து தன் சம்பளத்தை உயர்த்தி கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் இருக்கிறார்.

தனுஷ்: வாத்தி படம் வெற்றிக்கு பிறகு தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார் தனுஷ். இவர் இதுவரை 25 கோடி சம்பளம் பெற்றுள்ள நிலையில் தற்பொழுது விஜய், அஜித்தின் ஆர்வம் அரசியல் மற்றும் உலக சுற்று பயணம் பாதையில் செல்வதால், அந்த டாப் இடத்திற்கு தன்னை புதுப்பித்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சிவகார்த்திகேயனுக்கு பெரிய கும்பிடா போட்ட 5 இயக்குனர்கள்.. உச்சாணி கொம்பை வளைத்த வெங்கட் பிரபு

சிவகார்த்திகேயன்: இரண்டாம் நிலை ஹீரோவான இவர் விஜய்-அஜித்தின் இத்தகைய முடிவைக் கொண்டு தன்னை அடுத்த கட்ட முயற்சிக்கு மேம்படுத்தி வருகிறார். இதுவரை படத்திற்கு 35 கோடி சம்பளத்தை பெற்ற இவர் இந்த வாய்ப்பு கிடைத்தால் நாமும் 100 கோடி சம்பளத்தை பெறலாம் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார். இதை தொடர்ந்து இவரின் அடுத்த கட்ட படங்களான மாவீரன், அயலான் மற்றும் கமல் தயாரிப்பில் மேற்கொள்ளும் படங்களில் ஆர்வம் காட்டி தருகிறார்.

Trending News