தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் மற்றும் தல அஜித் இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ்சினிமாவில் உள்ளனர். இவர்கள் படங்கள் மூலமாக திரையரங்கில் வந்து சென்றாலே போதும் அந்த படம் வெற்றி எனக் கூறுமளவிற்கு கோடானகோடி ரசிகர்களை வைத்துள்ளனர்.
வான்மதி – கோயம்புத்தூர் மாப்பிள்ளை
அறிமுக நாயகர்களாக சினிமாவில் பயணித்து வந்த நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவருக்கும் முதல் முதலில் ஒரே நாளில் வெளியாகி திரையரங்கில் மோதிக்கொண்ட திரைப்படம் என்றால் அது வான்மதி மற்றும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படங்கள் தான். இந்த இரண்டு திரைப்படங்களிலும் 150 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றன.
கல்லூரி வாசல் இ – பூவேஉனக்காக
நடிகர் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் அடுத்ததாக கல்லூரி வாசல் மற்றும் பூவேஉனக்காக திரைப்படங்கள் மோதின இதில் பூவே உனக்காக திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 150 நாட்களுக்கு மேல் ஓடி விஜயின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் அஜித் கல்லூரி வாசல் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்ததால் அஜித்தின் தோல்வியை பெரிதாக ரசிகர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.
ரெட்டை ஜடை வயசு – காதலுக்கு மரியாதை
அஜித் நடிப்பில் வெளியான ரெட்டை ஜடை வயசு திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபீஸ் பட்டையை கிளப்பியது.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் – நிலாவே வா
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் இப்படத்தில் கதாநாயகன் கார்த்தி என்பதால் படத்தின் வெற்றியை பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் விஜய் நடிப்பில் வெளியான நிலாவே திரைப்படம் சற்று தோல்வியை சந்தித்தது.
உன்னைத்தேடி – துள்ளாத மனமும் துள்ளும்
சுந்தர்சி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான உன்னைத்தேடி திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. அதே மாதிரி எழில் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் 150 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.
உன்னைக் கொடு என்னைத் தருவேன் – குஷி
அஜித் நடிப்பில் உருவான உன்னை கொடு என்னை தருவேன் திரைப்படமும் விஜய் நடிப்பில் உருவானகுஷி திரைப்படமும் ஒன்றாக மோதியதில் குஷி திரைப்படம் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
தீனா – பிரண்ட்ஸ்
அஜித் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. இப்படத்தின் மூலம்தான் அஜித்திற்கு தல என்ற பெயரை கிடைத்தது. இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல் விஜய் நடிப்பில் உருவான பிரண்ட்ஸ் திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அன்றைய ஆண்டில் இந்த இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபீஸில் முக்கிய படங்களாகவே பார்க்கப்பட்டது. பிரண்ட்ஸ் படத்தில் விஜய், சூர்யா இணைந்து நடித்திருந்தாலும் படத்தில் விஜய் தான் கதாநாயகன் என்பதால் இப்படத்தின் வெற்றி விஜய்க்கு கொடுக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் சூர்யா அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்தார்.
வில்லன் – பகவதி
அஜித் நடிப்பில் உருவான வில்லன் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. ஆனால் விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படம் ரசிகர்களிடம் தற்போது வரை பெரிய வரவேற்பை பெற்றாலும் படம் வெளிவந்த காலத்தில் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
ஆஞ்சநேயா – திருமலை
அஜித் நடிப்பில் வெளியான ஆஞ்சநேயர் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது. ஆனால் விஜய் நடிப்பில் வெளியான திருமலை திரைப்படம் ஓரளவிற்கு வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த போட்டியில் விஜய் தான் வெற்றி பெற்றார்.
பரமசிவன் – ஆதி
அஜித் நடிப்பில் உருவான பரமசிவன் திரைப்படம் ஓரளவு வெற்றியை பூர்த்தி செய்தது. ஆனால் விஜய் நடிப்பில் வெளியான ஆதி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் பரமசிவன் திரைப்படம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றதால் அஜித் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது.
ஆழ்வார் – போக்கிரி
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது. ஆனால் அதே நாளில் வெளியான ஆழ்வார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் பெரிய தோல்வியை சந்தித்தது.
வீரம் – ஜில்லா
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படமும், நேசன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி 2 படங்களும் வெற்றி பெற்றன. கடைசியாக இவர்கள் இருவருக்கும் நேராக திரையரங்கில் மோதிக் கொண்ட திரைப்படங்கள் வீரம் மற்றும் ஜில்லா தான். இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸ் நல்ல வரவேற்பைப் பெற்றன.