வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எம்ஜிஆர், சிவாஜியை ஃபாலோ செய்த விஜய், அஜித்.. இரு தலைமுறைக்கும் இருக்கும் ஒற்றுமை

பல வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்த பெருமை எம்ஜிஆர், சிவாஜி இருவருக்கும் உண்டு. இரு பெரும் ஜாம்பவான்களாக இருந்த இவர்களுக்குப் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். டி ஆர் ரமணா இயக்கத்தில் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த கூண்டுக்கிளி திரைப்படத்தில் அவர்கள் இணைந்து நடித்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் இணைந்து வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

Also read:எம்ஜிஆர், சிவாஜி விளையாட்டு வீரர்களாக நடித்த ஒரே படம்.. பிகிலுக்கு டப் கொடுத்த நடிகர் திலகம்

இருப்பினும் அந்த கால சினிமாவில் அவர்கள் தங்களுக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தனர். அதேபோன்றுதான் அதற்கு அடுத்த தலைமுறைகளாக வந்த ரஜினி, கமல் இருவரும் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள், ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களை நாம் உதாரணமாக சொல்லலாம். இவ்வாறு ஏகப்பட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்த அவர்கள் இருவரும் இன்றுவரை சிறந்த நண்பர்களாக நட்புடன் இருக்கின்றனர்.

Also read:அன்பு தம்பிக்காக எல்லாத்தையும் மறந்த விஜய்.. காற்றில் பறக்கும் கொள்கைகள்

அதேபோன்று இவர்களுக்கு அடுத்த தலைமுறைகளாக வந்த விஜய், அஜித் இருவரும் கூட ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். அதிலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் இவர்களுக்குள் தொழில் ரீதியாக போட்டி இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர்கள் அன்புடன் தான் இருக்கின்றனர்.

இவ்வாறு முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டு சினிமாவை ஆட்சி செய்த இந்த நடிகர்கள் அனைவரும் ஆரம்பத்தில் இணைந்து நடித்திருந்தாலும் பிற்காலத்தில் தங்களுக்கு என ஒரு பாணியை உருவாக்கி நடிக்க ஆரம்பித்தனர். முன்னணி இடத்தில் இருந்தாலும் அவர்களின் அன்பில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதுதான் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையாகவும் கூறப்படுகிறது.

Also read:பயமுறுத்திய சினிமா இண்டஸ்ட்ரி.. விஜய்யை பின்பற்றும் அஜித்

Trending News