இன்று சினிமாவில் அமீரை ஒரு நடிகராக ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும் இயக்குனராக அவரை கொண்டாடுவதற்கு தனி ஒரு கூட்டமே உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று.
தன்னுடைய ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மனதில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் படம் எடுப்பார். சினிமாவுக்கு வந்து இத்தனை வருடங்களில் குறைவான படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.
அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், அமீரின் ஆதி பகவன் என நான்கு மாஸ்டர்பீஸ் படங்களை இயக்கியுள்ளார். இதில் ஆதிபகவன் படம் மட்டுமே வியாபார ரீதியாக கொஞ்சம் சறுக்கலை சந்தித்தது.
ஆனாலும் அந்த படத்தில் வரும் பகவான் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. ஜெயம் ரவியை வேறு ஒரு கோணத்தில் காட்டியிருந்தார். இப்படிப்பட்ட இயக்குனருடன் முன்னணி நடிகர்கள் படம் செய்ய ஆர்வமாக இருப்பார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான்.
அப்படித்தான் தளபதி விஜய்யிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததாம் அமீருக்கு. அமீரும் விஜய்யை சந்தித்து 2 கதை கூறினாராம். இரண்டு கதையுமே சூப்பராக இருப்பதால் நீங்களே ஒரு கதையை ரெடி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டாராம் விஜய்.
மேலும் உடனடியாக தொடங்க வேண்டுமா, அல்லது காலம் தாழ்த்தி தொடங்கலாமா எனவும் கேட்டுள்ளார். அதற்கு அமீர், எனக்கு அவசரமே இல்லை பொறுமையாக செய்யலாம் என்று கூறிவிட்டாராம்.
அதன் பிறகு விஜய் அடுத்தடுத்த படங்களில் பிஸியானதால் தற்போது வரை அமீர் படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இப்போதும் விஜய்யை வைத்து படம் இயக்க அமீர் தயாராக இருப்பதாகவும், எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதை தவற விட மாட்டேன் எனவும் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.