வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

6 முறை விஜய், அஜித் பொங்கலுக்கு மோதிக்கொண்ட படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வருடம் தவறாமல் பொங்கல் பண்டிகை நாளில் வெளியாகி திரையரங்கை ரணகளமாக்கும். அதிலும் கோலிவுட்டில் எதிரும் புதிருமாக இருக்கும் அஜித், விஜய் இருவரும் இதுவரை 6 முறை பொங்கல் பண்டிகை அன்று திரையரங்கில் மோதிக் மோதிக்கொண்டதால், அதில் அதிக வெற்றி யாருக்கு கிடைத்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி வரும் பொங்கலுக்கு 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரே நாளில் தல தளபதியின் வாரிசு, துணிவு படங்கள் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகி தல தளபதி ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

Also Read: தாறுமாறாக எகிறிய வாரிசு-வின் டிக்கெட் விலை.. ஒரு பாப்கார்ன், ஒரு கொக்ககோலா ஃப்ரீ என விளம்பரம் வேற

அந்த வகையில் இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வான்மதி விஜய் நடிப்பில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படம் வெளியாகி இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்த வருடமும் இவர்களது நடிப்பில் காலமெல்லாம் காத்திருப்பேன், நேசம் திரைப்படம் வெளியாகிறது.

இதில் காலமெல்லாம் காத்திருப்பேன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அஜித்தின் நேசம் தோல்வியை சந்தித்தது. 2001 ஆம் ஆண்டு சூர்யா, விஜய் நண்பர்களாக இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படமும் தீனா படமும் வெளியாகி இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

Also Read: போட்டி போட்டு மில்லியன் கணக்கில் ரசிகர்களை கூட்டும் வாரிசு, துணிவு.. கத இல்லனா வெளியில தலை காட்ட முடியாது

அதன் பின் 2006 ஆம் ஆண்டு ஆதி மற்றும் பரமசிவன் திரைப்படம் என இரண்டு படங்களுமே வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த வருடம் போக்கிரி மற்றும் ஆழ்வார் படங்கள் வெளியாகி, இதில் போக்கிரி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு மோகன்லால், விஜய் இணைந்து நடித்து வெளியான ஜில்லா மற்றும் வீரம் ஆவரேஜ் லெவலில் ஹிட்டானது.

இதன் பிறகு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி அஜித்தின் துணிவு படம் வெளியாகிறது அதற்கு அடுத்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி விஜயின் வாரிசு ரிலீஸ் ஆகிறது இந்த இரண்டு படங்களுக்கும் இடையே இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் கடும் மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.  அதிலும் வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் துணிவு இளசுகளின் விருப்பமான படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

Also Read: குடும்ப கதையா, அதிரடி ஆக்சனா ஒரே நாளில் போட்டு பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு தெரியுமா.?

இதில் தமிழகத்தில் வாரிசை விட துணிவு அதிக வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரையிலும் விஜய் 5 முறையும், அஜித் 3 முறையும் வாடிவாசலில் மோதும் காளைகளைப் போல பண்டிகை காலங்களில் மோதிக்கொண்ட படங்களின் மூலம் வெற்றி பெற்றுள்ளனர்.

Trending News