சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த விஜய் மற்றும் எஸ் ஏ சி.. தலையில துண்டை போட்ட தயாரிப்பாளர்..!

Actor Vijay helps people and students: “காசு அவரோடது ஆனா பெயர் எனக்கு வேணும்” என்பது போல் அரசியலில் குதிக்க போகும் விஜய் மாணவர்களுக்கு பரிசு கொடுப்பது, நூலகம் அமைப்பது என பல பொது சேவைகளில் இறங்கி உள்ளார். இதையெல்லாம் சொந்த காசுல பண்ணுகிறாரா அல்லது ப்ரொடியூசர் கொடுக்கும் காசில் பண்ணுகிறாரா என்பது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

இரண்டும் ஒன்றுதானாயா என்று நமக்கு சிந்திக்கத் தோன்றியிருந்தாலும் இதில் சில உள்குத்துக்கள் உள்ளன. தன் படங்களுக்கு சம்பளம் வாங்கி அந்த காசில் பண்ணினால் ஒன்றுமில்லை. சம்பளம் போக தனியாக சமுக சேவைக்கென்று காசு வாங்கி இந்த சேவைகளை பண்ணினால் அது தயாரிப்பாளருக்கு குடைச்சலை ஏற்படுத்தும் அல்லவா.  இதை ஒரு தயாரிப்பாளரின் மகன் பேட்டி ஒன்றில் மனம் திறந்து இருக்கிறார்.

விஜய் நடித்த குஷி, கில்லி, சிவகாசி போன்ற படங்களை தயாரித்தவர் .  இதன்மூலம் ஏ எம் ரத்தினத்திற்கும் விஜய்க்கும் நல்ல நட்பு இருந்து வந்தது. விஜய் நடித்த  புலி படத்தின் ரிலீஸ் இன் போது ஏற்பட்ட பிரச்சனையிலும் ஏ எம் ரத்தினம் தலையிட்டு சமூகமாக முடித்து வைத்தார். அப்படி உதவும் மனம் கொண்ட தயாரிப்பாளரை விஜய் தனது சொந்த லாபத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தி உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

Also read: தலைவனுக்கு உண்டான தகுதியை இழந்த விஜய்.. 48 மணி நேரம் கழித்து வெளியான அறிக்கையால் வெடித்த சர்ச்சை

சில ஆண்டுகளுக்கு முன்பு சமூகப் பணிகளை மேற்கொள்ள தொடங்கிய தளபதி அவர்கள்  பசு தானம் செய்வது, ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்வது, மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுப்பது என பல்வேறு வகைகளில் மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் அவர் அவ்வாறு செய்தது  பிரபல தயாரிப்பாளரான தன் தந்தையின் பணத்தில் தான் என்று அவரது மகன் செய்தியாளரிடம் புலம்பி உள்ளார்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று இருந்த விஜய், தனது தந்தை எஸ் ஏ சி சொல்லித்தான் இதை செய்தாரா அல்லது தன் சுய சிந்தனையோடு செய்தாரா என்று தெரியவில்லை. பணபரிவர்த்தனையானது  மக்கள், தயாரிப்பாளர், நடிகர், திரும்பவும் மக்கள் என ஒரு ரவுண்டு வருகிறது.

விஜய் தன் சொந்த பணத்தில் மக்களுக்கு சேவை புரிவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் வலுத்த வண்ணம் உள்ளன. விஜய் வாய் திறந்தால் மட்டுமே இச்சம்பவத்தின் உண்மை தன்மை புரியும். மேற்கூறிய சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரசியலுக்கு வரும் அத்தனை அம்சங்களும் இளைய தளபதிக்கு  இருப்பதாக தெரிகிறது. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!

Also read: அஜித்திற்கு மாஸான கதையை ரெடி செய்த வெற்றிமாறன்.. வயித்தெரிச்சலில் தனுஷ், விஜய்

Trending News