புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விஜய், கமலை காலி செய்ய போகும் 4 நாள் வசூல்.. வெறியோடு களத்தில் குதித்த ஜெயிலர்

Jailer: கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் ஜெயிலர் நாளை உலக அளவில் வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் முத்துவேல் பாண்டியன் ஆக கலக்கியிருக்கும் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவே பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தின் ப்ரீ பிசினஸ் எதிர்பார்த்ததற்கும் மேலாக லாபத்தை கொடுத்திருந்தது. அதை தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அத்தனை டிக்கெட்டுகளும் காலியானது. அந்த வகையில் சென்னை மட்டுமல்லாமல் அதை சுற்றி இருக்கும் அனைத்து பகுதிகளிலும் முதல் மூன்று நாட்களுக்கு எந்த தியேட்டர்களிலும் ஒரு டிக்கெட் கூட இல்லை என்பது தான் ஆச்சரியம்.

Also read: மொக்கை வாங்கி, டெபாசிட் இழந்த ஆறு பார்ட் 2 படங்கள்.. பார்க்கவே முடியாமல் தலைவலி ஏற்படுத்திய கமல்

அதே போன்று தான் வெளிமாநிலங்களிலும் ஜெயிலர் படத்திற்கான ஆர்வம் பெரிய அளவில் இருக்கிறது. அதிலும் எந்த படங்களும் இதுவரை இப்படி ஒரு சாதனையை டிக்கெட் முன்பதிவில் செய்தது கிடையாது என தியேட்டர் உரிமையாளர்கள் பரவசத்துடன் கூறி வருகின்றனர்.

அந்த அளவுக்கு ஜெயிலர் ஃபீவர் இப்போது பரவிக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி ஒரு வரவேற்பை எதிர்பார்த்த சூப்பர் ஸ்டாரும் 4 நாளில் 400 கோடியை தட்டி தூக்கி விட வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறாராம். இப்பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே விக்ரம் பட சாதனையை முறியடிக்க ரஜினி ஆர்வத்துடன் இருப்பதாக செய்திகள் வெளியானது.

Also read: விஜய் முடிவால் அட்லீக்கு வந்த பெரிய வாய்ப்பு.. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள போகும் லோகேஷ்

அதை உறுதி செய்யும் பொருட்டு அவர் விஜய், கமலை காலி செய்ய இப்போது தீவிரமாக களத்தில் குதித்து இருக்கிறார். அதன் காரணமாகவே இசை வெளியீட்டு விழாவில் அவர் அவ்வளவு எனர்ஜியுடன் பேசி இருந்தாராம். அது இப்போது நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஏற்கனவே மிகப்பெரும் ஆவலுடன் இருந்த ரசிகர்கள் இப்போது பேராவலுடன் படத்தைக் காண காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் தயாரிப்பு தரப்பும் இப்போது சோஷியல் மீடியாவை தங்களுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் புது புது போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் ஆவலையும் தூண்டி வருகிறது. இதனாலேயே இப்போது கமல், விஜய் போன்ற நடிகர்கள் கொஞ்சம் கலக்கத்துடன் இருப்பதாக கோடம்பாக்க வட்டாரம் சலசலத்து வருகிறது.

Also read: குட்டிப் பகை ஆடு உறவா.? குடும்ப சண்டை, ரஜினியை விட்டுக் கொடுக்காத மருமகன்.. உச்சி குளிர்ந்து போன சூப்பர் ஸ்டார்

Trending News