திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய், சங்கீதா போல் சர்ச்சையில் சிக்கிய அடுத்த ஜோடி.. விரைவில் விவாகரத்தா?

Vijay – Sangeetha : கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது. அதாவது விஜய் படத்தின் கதாநாயகிகளை சங்கீதா தான் தேர்வு செய்தாராம். இந்நிலையில் திரிஷாவுடன் ஏற்கனவே ஒரு காலத்தில் விஜய் கிசுகிசுக்கப்பட்டார். இப்போது லியோ படத்தில் மீண்டும் திரிஷாவுடன் விஜய் ஜோடி போட்டிருந்தார்.

அதனால் தான் விஜய் மற்றும் சங்கீதா இடையே பிரச்சனை ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதோடுமட்டுமல்லாமல் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் சேர்ந்து எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாததால் இது உண்மைதானோ என்று பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் இவர்களைப் போல் மற்றொரு ஜோடியும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள். அதாவது ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது. இதை அடுத்து சமீபத்தில் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் திறப்பு விழாவில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் கலந்து கொண்டனர்.

Also Read : ரஜினிக்கு போட்டியா உச்சம் தொடும் விஜய்யின் சம்பளம்.. அரசியல் என்ட்ரிக்கு முன் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்

பொதுவாக எல்லா நிகழ்ச்சியிலும் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவருமே கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இவ்வளவு பெரிய விழாவில் ஐஸ்வர்யா ராய் வராதது தான் இப்போது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருவருமே இப்போது தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா தரப்பிலிருந்து இது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியே வரவில்லை. சமீபகாலமாகவே சினிமா துறையில் விவாகரத்து செய்தி அதிகமாகி வருகிறது. இது வெறும் வதந்தியாக தான் இருக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also Read : விஜய்யிடம் செம திட்டு வாங்கிய வெங்கட் பிரபு.. ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேனே!

Trending News