திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை.. விஜய்க்கும் சித்தார்த்துக்கும் இப்படி ஒரு ரிலேஷன்ஷிப்பா

Actor Vijay and Siddharth: விஜய் எத்தனையோ படங்களில் ஜாலியாக நடித்திருந்தாலும் அவருடைய உண்மையான குணம் சைலண்டாக இருப்பது தான். யாரிடமும் அதிகமாக பேச மாட்டார் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாலும் கமுக்கமாக இருந்துட்டு போவார். இப்படித்தான் இவரைப் பற்றி பல நட்சத்திரங்களும் கூறி இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது முதல்முறையாக இவரைப் பற்றி நடிகர் சித்தார்த் இந்த மாதிரி சொல்வது ரொம்பவும் ஆச்சரியப்பட வைக்கிறது. அதோடு இந்த கொசு தொல்லை தாங்க முடியலை என்று சொல்லும் அளவிற்கு ஓவராக ஐஸ் வச்சிருக்கார். அதாவது நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது பாடல்களை பாடாமல் கேட்காமல் இருக்க மாட்டேன்.

Also read: விஜய், சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்கும் கவின்.. அடுத்தடுத்து இணையும் மெர்சல் கூட்டணி

எப்பொழுதும் என்னை உற்சாகப்படுத்துவது அவரது படங்கள் மட்டும் தான். அப்படி இருக்கும் பொழுது தற்செயலாக நான் அவரை ஒரு ஹோட்டலில் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது நாங்கள் இருவரும் ஒன்றாக சாப்பிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிலிருந்தே நாங்கள் ரொம்ப நெருக்கமாக பழகிவிட்டோம். அந்த நேரத்தில் நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வது என்னுடைய படங்களை பற்றி தான்.

அப்படித்தான் என்னுடைய தெலுங்கு படமான பொம்மரில்லு படத்தில் நான் டான்ஸ் ஆடிய மூவ்மெண்டை எப்படி ஆடினாய் என்று கேட்பார். ஏனென்றால் அது அவருக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அதற்கு நான் அவரிடம் உங்களைப் பற்றி விஷயங்களை சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் முதலில் நான் தான் உன்னிடம் கேட்டேன் அதற்கு பதில் சொல் அப்புறம் என்னிடம் கேள்வி கேளு என்று நக்கலாக பேசுவார்.

Also read: தன்னைவிட அதிக வயதுடைய ஹீரோகளுக்கு 5 படங்களில் அம்மாவாக நடித்த நடிகை.. விஜய், அஜித்துக்கும் இந்த நிலைமைதான்

பிறகு நான் அவரை விஜய் என்று தான் கூப்பிடுவேன். அதற்கு அங்கு இருப்பவர்கள் அப்படி கூப்பிடக் கூடாது மரியாதையுடன் பேசுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் விஜய் அப்படிப்பட்ட ஆள் எல்லாம் கிடையாது. அவர் மிகவும் நார்மலான க்யூட்டான ஒரு நடிகர். அத்துடன் செம ஜாலி டைப்.

நான் அவரை எங்க பார்த்தாலும் கட்டிப்பிடித்துக் கொண்டு ரொம்ப நேரம் விடவே மாட்டேன் எனக்கு அவரையும் அவருக்கு என்னையும் மிகவும் பிடிக்கும். அப்படி எங்களுக்குள் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது. அவரைப் பார்த்தால் ரொம்பவே எனர்ஜியாக இருக்கும். இப்படி விஜய் பற்றி சித்தார்த் கூறிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also read: விஜய் 68-ல் ஜோதிகா கடுப்பில் விஜய்.. பழைய கணக்கை தீர்க்க சரியான நேரம்.!

Trending News