புதன்கிழமை, ஜனவரி 22, 2025

லண்டனில் மீட்டிங் போடும் விஜய், சூர்யா.. விரைவில் வெளியாக இருக்கும் அடுத்த பட அப்டேட்

Thalapathy Vijay – Actor Surya: சினிமாவில் மீண்டும் மல்டி ஸ்டார் படங்கள் டிரெண்டாக தொடங்கியதிலிருந்து யார் யாருடன் சேர்ந்து நடிப்பார்கள், எந்த படத்தில் எந்த ஹீரோ வில்லனாக நடிக்கப் போகிறார் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாகி இருக்கிறது. சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தது கூட மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

சூர்யா இதற்கு அடுத்து அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்க அவருடைய ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். கங்குவா திரைப்படத்திற்கு பிறகு, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பிரபல நடிகர் துல்கர் சல்மானும் இணைகிறார். இந்த அப்டேட் வந்து ஒரு சில நாட்களிலேயே தளபதி விஜய் மற்றும் சூர்யா லண்டனில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read:கூர்க்காவை வைத்து விரட்டியடிக்கப்பட்ட விஜய்.. அவமானத்தால் எடுத்த விபரீத முடிவு

லியோ படம் முடிந்த கையோடு ஓய்வெடுப்பதற்காக லண்டன் சென்றுள்ள விஜய், சூர்யாவை சந்திக்க இருப்பது எல்லோருக்கும் ஏன் என்ற கேள்வியை தான் எழுப்பி இருக்கிறது. ஒரு வேலை தளபதி 68 இல் சூர்யா இணைய இருக்கிறாரா அல்லது சூர்யாவின் படத்தில் விஜய் இணைவாரா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கல்விக்காக பல நிதி உதவிகளை செய்து வரும் சூர்யாவிடம், விஜய் தன்னுடைய அடுத்த கட்ட நகர்விற்கான திட்டத்தைப் பற்றி விவாதிப்பாரா எனக் கூட சந்தேகம் எழுந்திருக்கிறது.

இவர்கள் இருவரும் சந்திக்க இருப்பது, விஜய்- சூர்யா கூட்டணியை பற்றி பேசுவதற்காக இல்லையாம். விஜய்- ஜோதிகா மீண்டும் இணைந்து நடிப்பதை பற்றி பேசுவதற்காக தான். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கும் ஜோதிகா அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் மம்முட்டியுடன் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.

Also Read:விஜய் கூட நடிக்கும் போதே அந்த படம் பிளாப் ஆயிடும்னு தெரியும்.. எரியுற நெருப்புல எண்ணெய் ஊற்றிய நடிகை

பிசியாக இருக்கும் ஜோதிகாவை, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68ல் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைக்காகத்தான் சூர்யா மற்றும் விஜய் சந்திக்க இருக்கிறார்கள். ஏற்கனவே விஜய் மற்றும் ஜோதிகா மெர்சல் திரைப்படத்தில் இணைய வேண்டியது. ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

தளபதி 68ல் ஜோதிகாவை நடிக்க வைக்கத்தான் தற்போது திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கு சூர்யா ஓகே சொல்வாரா என்பதுதான் இப்போதைக்கு கேள்வி. சூர்யா சம்மதம் சொல்லிவிட்டால் விரைவில் தளபதி 68 அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், ஜோதிகா கூட்டணியில் குஷி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மறுபடியும் இந்த ஜோடியை திரையில் பார்ப்பதற்கு எல்லோருமே ஆவலாக இருக்கிறார்கள்.

Also Read:லியோவை ஓரங்கட்டிய ஜெயிலர்.. எகிறிய பிசினஸால் தூக்கத்தை தொலைத்த விஜய்

Trending News