திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கேப்டனை வைத்து இமேஜை காப்பாற்ற பார்க்கும் தளபதி.. ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் விஜய், VP-ன் அரசியல்

Actor Vijay: விஜய், வெங்கட் பிரபு கூட்டணியின் கோட் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கிறது. சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளிவந்து வைரலாகி கொண்டிருக்கிறது.

அதை ரசிகர்கள் விசில் போடு என கொண்டாடி வரும் நிலையில் மற்றொரு சர்ப்ரைஸும் வெளிவந்துள்ளது. அதாவது கோட் படத்தில் ஏ ஐ டெக்னாலஜி மூலம் கேப்டன் வர இருக்கிறாராம்.

இதை அவருடைய மனைவி பிரேமலதா ஒரு பேட்டியின் மூலம் உறுதி செய்து இருக்கிறார். இதற்காக வெங்கட் பிரபு ஐந்து முறைக்கும் மேலாக கேப்டன் வீட்டுக்கு நடையாக நடந்திருக்கிறார்.

சண்முக பாண்டியன் மூலம் தூதுவிட்டு பிரேமலதாவையும் சந்தித்திருக்கிறார். அதேபோல் விஜய்யும் அவருடைய அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கிறாராம்.

இமேஜை காப்பாற்ற பார்க்கும் தளபதி

மேலும் கேப்டன் உயிரோடு இருந்தால் நிச்சயம் இதில் நடிக்க சம்மதித்து இருப்பார். அவருடைய இடத்தில் நான் இருப்பதால் இதற்கு மறுப்பு சொல்லப்போவதில்லை.

தேர்தல் முடிந்ததும் இது பற்றி பேசுவோம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். ஆனால் எப்படியும் கேப்டனின் கேமியோ ரோல் கட்டாயம் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

இதன் மூலம் விஜய் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்திருக்கிறார். ஏனென்றால் சமீபத்தில் கேப்டன் மறைவின் போது இவர் பல விமர்சனங்களை சந்தித்தார்.

இதன் மூலம் அந்த இமேஜை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதேபோல் அரசியல் தலைவராக ஓட்டுகளை கைப்பற்றவும் முடியும்.

அந்த வகையில் வெங்கட் பிரபுவும் கோட் படத்தை இதை வாய்த்தே ப்ரமோஷன் செய்து விடுவார். ஆக மொத்தம் இந்த விஷயத்தில் விஜய்யின் பக்கா அரசியல் இருக்கிறது.

Trending News