வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சும்மா வாய்க்கு வந்ததை அடிச்சு விடுங்க.. தயாரிப்பாளர் மீது செம காண்டில் விஜய்

லியோ படத்திற்கு பிறகு அடுத்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே விஜய்யின் 68வது படத்தில் அவர் வாங்கும் சம்பளத்தை பற்றிய பேச்சு தான் காரசாரமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

லோகேஷ் இயக்கும் லியோ படத்திற்கு விஜய் 120 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். அடுத்ததாக வெங்கட் இயக்கத்தில் விஜய் நடிக்க போகும் படத்திற்கு தளபதியின் சம்பளம் 200 கோடி என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது துளி அளவும் உண்மை இல்லை, வதந்தி என தற்போது தெரியவந்துள்ளது.

Also Read: ரஜினி, விஜயகாந்த் போல கோட்டை விடக்கூடாது.. நின்னு நிதானமாக காய் நகர்த்தும் தளபதி, உதவும் பெரிய புள்ளி

இந்த வதந்தியை பரப்பியவர்கள் அரசியல் காரணங்களுக்காக விஜய் தரப்பில் இருந்தே செய்திருக்க வேண்டும். இல்லை என்றால் தளபதி 68 படத்தை தயாரிப்பதாக சொல்லக்கூடிய ஏஜிஎஸ் தயாரிப்பாளர் இந்த வதந்தியை பரப்பி இருக்க வேண்டும். எதை சொன்னாலும் கேட்கும் ரசிகர்கள் இருக்கும் வரை இப்படித்தான் இவர்கள் வதந்தியை பரப்புவார்கள்.

சம்பந்தம் இல்லாமல் விஜய்க்கு 200 கோடி என்றதுமே அதை பெருமையாக பேசி வருகிறார்கள். இதனை பயன்படுத்தி இவர்கள் இந்த வதந்தியை பரப்புகிறார்கள். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பவர் என்ன என்பதை காட்டுவதற்கும் இவ்வளவு மோசமாக வதந்தியை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாமல், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: நாற்பது நாளில் பல நூறு கோடிக்கு வெளிவேஷம் போடும் அப்பா மகன்.. தளபதியின் ராஜதந்திரம்

இப்படி தளபதியை குத்தி விட்டு ஏஜிஎஸ் நிறுவனம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. விஜய்க்கு 200 கோடி என்றால் மற்ற ஹீரோக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். இது சாதாரண விஷயம் அல்ல, இதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த விஷயம் விஜய்யின் காதுக்கு எட்டியதும் தயாரிப்பாளர் மீது செம காண்டில் இருக்கிறார்.

அதேபோல் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் தரப்பிலிருந்து இந்த வதந்தியை பரப்பினார்களா என்ற கோணத்திலும் விசாரித்து மிரட்டி வைத்திருக்கிறார். ஏற்கனவே கோலிவுட் நடிகர்கள் தான் தாறுமாறாக சம்பளத்தை ஏற்றி படத்தின் பட்ஜெட்டையும் உயர்த்தி விட்டிருக்கின்றனர் என டோலிவுட், மோலிவுட் தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

Also Read: விஜய் பட இயக்குனரை நம்பி மோசம் போன வாரிசு.. மனவேதனையில் தவித்து வாடும் அப்பா நடிகர்

Trending News