கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தளபதி விஜய்யை கடவுள் ரேஞ்சுக்கு தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய தியேட்டர் ஓனர்கள் தற்போது அதே வாயால் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரை திட்டி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு மேல் தியேட்டர் தொழில்கள் மொத்தமாக முடங்கிக் கிடந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் தான் அதற்கு மறுவாழ்வு கொடுத்ததாக பல தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்தனர்.
எதிர்பார்க்காத வகையில் மாஸ்டர் திரைப்படம் அதிக லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் தியேட்டரை நோக்கி படை எடுத்துள்ளனர் என்பதையும் பல திரையரங்கு உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மாஸ்டர் படம் வெளியாகி வெறும் 16 நாட்களில் அமேசான் தளத்தில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இதன் மூலம் தியேட்டர்காரர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதற்கு காரணம் கடந்த 16 நாட்களாக பல தியேட்டர்களில் குடும்பம் குடும்பமாக மாஸ்டர் படம் பார்க்க கூட்டம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென OTT தளத்தில் வெளியிட்டால் தியேட்டர் பிசினஸ் படுத்துவிடும் என கட்டையை போடுகிறார்களாம்.
![master-vijay](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/01/master-cat.png)
ஆனால் விஜய் தரப்பில், பல நாடுகளில் மாஸ்டர் படம் வெளியிட முடியாத சூழ்நிலையில் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியிட்டால் கிட்டத்தட்ட 40 நாடுகளில் உள்ள ரசிகர்கள் படத்தை பார்க்க சரியாக இருக்கும் என முடிவு செய்து விஜய்யிடம் அனுமதி பெற்று மாஸ்டர் பட குழுவினர் அமேசான் தளத்திற்கு ஜனவரி 29ம் தேதிக்கு ஓகே சொல்லிவிட்டார்களாம்.
தற்போது தியேட்டர்காரர்கள் அனைவரும் மாஸ்டர் படத்தை இரண்டு வாரங்கள் கழித்து பிப்ரவரி 12 அமேசான் தளத்தில் வெளியிட்டு கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அதுவும் வார இறுதி நாட்களில் மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. துவண்டு கிடந்த தியேட்டர் பிசினஸை தூக்கி கொடுத்த பிறகும் நம்மளை தூக்கி கணம் பார்க்கிறார்களே என விஜய் ஆதங்கத்தில் உள்ளாராம்.