வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ருத்ரனுக்கு போட்டியாகும் பிச்சைக்காரன் 2.. ஒரே நாளை குறி வைத்த விஜய் ஆண்டனி, ராகவா லாரன்ஸ்

இந்த வருட ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் விஜய், அஜித் இருவரும் போட்டி போட்ட நிலையில் இந்த மாதம் தனுஷ் சிங்கிளாக வந்து வசூலை தட்டிச் சென்றார். அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் சிம்பு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு படங்கள் நேருக்கு நேர் மோத இருக்கிறது. அதாவது விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

Also read: லோகேஷ் படத்தில் ராகவா லாரன்ஸ்.. பிரம்மாண்ட முறையில் உருவாகும் புது கூட்டணி.!

அதேபோன்று ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ருத்ரன். கதிரேசன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ஒரு பாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

அந்த வகையில் இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரும் ஆர்வத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனாலேயே அவர் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார்.

Also read: திருமணத்திற்குப் பின் கமலஹாசனுடன் நடிக்க மறுத்த நடிகை.. இப்ப ராகவா லாரன்ஸுடன் ஜோடி

அதேபோன்று ராகவா லாரன்ஸ் நடிக்கும் திகில் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு கிடைக்கும். அதன் காரணமாகவே அவர் தற்போது அது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் தற்போது அவர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

அந்த வகையில் ருத்ரன் மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய இரு படங்களும் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று நேரடியாக களத்தில் சந்திக்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த செய்தி சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த ரேஸில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற விவாதமும் இப்போது எழுந்துள்ளது.

Also read: ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்திற்கு ஆப்பு.. நடிகையின் திமிர் பேச்சால் வந்த விளைவு

Trending News